Sunday, July 9, 2023

ஓநாய்களின் காடு?!-பொன்.காந்தன்

 


மயில்கள் தோகை விரிக்கும்
பேரழகில்
காட்டில் வேறெந்த மிருகமும்
இல்லையெனும் மாயை
அவ்வப்போது
கணத்தில் பற்றிக்கொள்ளும்
வேடனை கண்டதில்லை என
மரங்கள் வாக்குமூலமும் தரும்
அந்தி பொழுதில் பறவைகளும்
முகில்களும் கூட கூடி
இடி மின்னல்
வானில் இல்லையெனும் படி
கவிதை அள்ளி தரும்
கடற்கரை சாலை வருடல்
சுறாவும் சூறாவளியும் அற்ற கடலில்
கால் நனைத்து போக அழைக்கும்
உண்மை
அதுவாயிருக்க வேண்டுமெனில்
ஓ நாயில் தட்டில்
பாலை பழங்களை
மரத்தின் சுவையான ஈரல் எனவும்
நம்ப வைக்க வேண்டும்
சிங்கத்தின் முன் புற்கள்
வெருண்டு ஓட வேண்டும்
புல்லில் வடிவது
பச்சை இரத்தமாக வேண்டும்
கேள்வி எதுவெனில்
கடலின்
காட்டின் வானத்தின் உண்மைகளை
யார் பேச வேண்டும்
காட்டின் உண்மையை
மயிலா மான்களா சிங்கங்களா
ஓநாய் களா பேச வேண்டும்
இப்போது
எங்கள் எல்லோருக்கும்
எந்த உண்மை தேவையாய் இருக்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...