போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள் ஆகி கொண்டிருக்கின்றன. போருக்கு பின் கையில் ஒரு ரூபாய் நாணயம் கூட இல்லாமல் அகதி முகாமில் அடைந்த போது சோற்றில் இருந்து உள்ளாடை சவர்க்காரம் வரை கை ஏ ந்தியப்படி வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இரவுகளில் ஐம்பது நூறு பேர் ஒன்றாக தூங்க வேண்டி இருந்தது. ஒரு பத்து லீட்டர் கான் தண்ணீரில் குடித்து குளித்து தோய்த்து. கடைசியாய் சிந்தும் தண்ணீர் துளிக்கு கவிதை எழுதும் கவிஞர் ஆக வேண்டி இருந்தது. இந்த சிரமங்களில் இருந்து எப்போதும் விடுதலை என்று அகதி முகாம் வேலியை பார்த்தபடி காத்திருப்பு நீண்டது. அவ்வப்போது வரும் உறவினர் வந்து பார்க்கும் போது கொண்டு வரும் வீட்டு சமையல் ஆப்பிள் ஒரேஞ்சு இப்படி மனதை கொஞ்சம் வருடியது.
நீண்ட காத்திருப்புக்கு பிறகு வவுனியாவில் உறவினர்கள் இருப்பவர்கள் வந்து பதிவு செய்யும் படி அறிவிப்பு. முகவரி சரியாக தெரியாத போதும் தடு மாறி பதிந்து ஒரு வாறு தொலை பேசி மூலம் வெளியில் வரும் நாளையும் சொல்லி முடிவாக வவுனியா நகர சபை மைதானத்தில் கொண்டு சென்று இறக்கி மேலும் கீழும் ஏற இறங்க எழுபத்தி எட்டு தரம் பார்த்து ஏகப்பட்ட கேள்விகளுக்கு ஓடுங்கியபடி பதில் அளித்து இன்னொரு வாழ்க்கையின் வாசலுக்குள் நுழைய சொல்லணா பாடுகள். அந்த பொழுதில் போருக்குள் இருந்து வந்தவர்களை யாரும் அண்ட பயந்த நேரம் ஆயினும் அதையும் கடந்து வந்து வவுனியாவில் ஓடி வந்து கூட்டிச் சென்ற சொந்த காரர் எனக்கு பெரு வரம். சொந்தம் என்பதற்கும் ஒரு நிகரற்ற அர்த்தம் கிடைத்த உணர்ச்சி பூர்வமான சந்தர்ப்பம் அது.
இப்போது அகதி முகாமில் இருந்து வெளியே வந்தாயிற்று.சொந்த காரர் வீட்டில் வாழ்க்கை. சோறு கிடைத்தது. உடுக்க துணியும் படுக்க அறையும் எல்லா வற்றயும் விட மனதுக்கு ஆறுதல் தந்தார்கள். மீண்டும் வாழ்வில் மீண்டு எழ சொந்தம் தந்த அன்புதான் அத்தி பாரம். ஆயினும் எனது பயணம் தொடர அடுத்து ஒரு தொழில் வேண்டும்.அது உடன் அவ்வளவு சாத்தியம் இல்லை ஆனால் முயற்சிக்க வேண்டி இருந்தது. ஏற்கனவே ஊ டக துறையில் அனுபவம் இருந்தது ஆனால் அதை சொல்ல முடியாது. அதை சொல்லி வேலை கேட்டால் நேர் முகம் செய்பவருக்கு வேர்த்து விடும்.ஆதலால் போர் க்கால அனுபவங்களை மூடி புதிய பக்கம் திறக்க வேண்டிய நிற்பந்தம்.
வவுனியாவில் பத்திரிகை ஒன்றில் தொலை காட்சி ஊடக கற்கை நெறி ஒன்று கொழும்பில் ஆரம்பிக்க போவதாக விளம்பரம் கண்டேன் ஏதோ நம்பிக்கையில் விண்ணப்பித்தேன். பிறகு இலங்கை மன்ற கல்லூரியில் நேர் முகம் நடந்தது. அதில் தேறி நுழைவு கிடைத்தது.இப்போது நான் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு ரயில் அல்லது பேருந்தில் பயணிக்க வேண்டும்.சொல்ல வெட்கமான கதையா அல்லது பெருமையான கதையா என்று தெரிய வில்லை ஆனாலும் சொல்கிறேன். நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக கொழும்பு போகும் போதுஎன் வயது 37. மட்டு மல்ல முதன் முதல் ரயில் பயணமும் அதே வயதில் தான். அதுவரை வன்னி மண்ணை விட்டு வெளியே சென்றதில்லை.
கையில் 5000 ரூபாய்க்கு முதன் முதல் வாங்கிய நொ க்கியா கை பேசி ஒன்று. வவுனியா புகையிரத நிலையத்தில் இரண்டாம் வகுப்பு சீட்டெடுத்து மூன்றாம் வகுப்பு ஓடைக்குள் குந்தி இருந்த படி கொழும்பு கோட்டையில் இறங்கினேன். இத்தனைக்கும் நூறு ரயில் பயணம் கண்டவன் போல முகத்தை வைத்து கொண்டேன். சிங்களம் தெரியாது. மாதவாச்சிக்கு அப்பால் வலிந்து ஒரு புன்னகையை உதட்டில் வைத்து கொண்டேன். கொழும்பு கோட்டையில் இறங்கி பிறகு எந்த இலக்க பேருந்தில் ஏறி எங்கே போய் இறங்கலாம் என்பது தெரியாது பைனவா கூட தெரியாது.ஆதலால் ஆட்டோ பிடித்து போனேன். ஆட்டோ காரரோ என்னை கட்டு நாயக்காவில் இருந்து வரும் பயணி என்றுதான் நினைத்திருக்க கூடும்.ஏனென்றால் ஏறும் போது எவ்வளவு என்று கூட கேட்கவில்லை பாருங்கள்.
ஒரு வாறு இலங்கை மன்ற கல்லூரி வகுப்புகளில் இணைந்து கொண்டேன். ஒரு ஊ டக சான்று எனக்கு அவசியம் இனி. அதனால் என்ன சிரமபட்டே னும் அந்த கற்கை நெறியை முடிக்க எண்ணினேன். அங்கு ஒரு மாதம் தங்கி நின்றேன். பிறகு விடு முறை. இதற்கு இடையில் வகுப்பில் கிடைத்த கொழும்பு நன்கு தெரிந்த சிலரிடம் பேருந்து வழி தடங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன். விடுமுறைக்கு மீண்டும் வவுனியா புறப்பட்டேன். கோட்டை ரயில் நிலையத்தில் சீட்டை பெற்று கொண்டேன். இரவு பயணம்.புகையிரத மேடையில் நிற்கிறேன். அப்போதும் ஐநூறு தடவை பயணித்தது போல முகத்தை வைத்து கொண்டேன்.காலில் ஊமல் கொட்டை(சாப்பாத்து) வேறு
இனிதான் இக்கதையின் கிளை மாக்ஸ். இந்த பதின் மூன்று வருடத்தில் யாருக்கும் வெக்கத்தில் சொல்லாத கதை.இரயில் ஒன்று வந்தது ஏறிக்கொண்டேன்.அந்த இரவு இனிதாகட்டும் என மனம் எண்ணியது ஆனால் ஒரு அரை மணித்தியாலம் செல்ல ஏதோ மாற்றம் மனதில் பட்டது.ஆனாலும் அதை சரியாக உணர முடியவில்லை. சிலர் என்னயே பார்ப்பது போலவும் ஒரு பிரமை.மேனி சில்லென்று விறைக்க தொடங்கிய போதுதான் புரிய தொடங்கியது நான் ஏறி இருப்பது.வவுனியா நோக்கி போகும் ரயில் அல்ல மாத்தளை நுவரேலியா நோக்கி போவது.நல்ல வேளை டிக்கெட் பரி சோதகர் வர வில்லை. முடிவாய் கண்டியில் இறங்கினேன். வவுனியாவு க்கு கொழும்பில் இருந்து ஒரு முழு இரவும் ஒரு முழு பகலும் பயணி த்த ஒரே நபர் நானாகத்தான் இருக்க முடியும்.

No comments:
Post a Comment