கங்கு மட்டை அகற்றி
கருக்கு வெட்டாமல்
நொங்கு ஒரு குலை வெட்டி
சங்கை அறுத்து
சறுக்கென்று தெறிக்கும் நீர்
பருக்கள் போல்
முகத்தில் அங்கங்கு கிடக்க
பங்கு போட்டு
பற்றை பறுகு தட்டி
சக்கப் பணியவிருந்து
பொங்கிக் கிடக்கும்
நொங்குக் கண்ணில்
விரல் நுனி விட்டு
வெளிக்கிட வைத்து
நழுக்கு முழுக்கெண்டு
நாக்கும் நோகாமல்
வாயும் வதையாமல்
நல்ல சதைப்பிடிப்பெண்டு
நாக்கையும் விட்டு நக்கி
பட்டால் கயர் போகாதெண்டு
எட்டி வச்சு
எல்லாத்தையும் துவம்சமாக்கி
தூசி தட்டி எழும்பி
கால் விறைப்பில் தடுமாறி
எட்டி நடந்துபோக
பட்டி மாடுகள் வந்து
மிச்சத்தை
நறுக்கு நறுக்கெண்டு
நன்னி நாராக்கி
தின்று முடிக்க
வடலி ஒன்று ஓரமாய்
ஒன்றும் விடாமல் கவனிக்கும்
வட்டு பிரிந்து
வானுயர்ந்து
கன்னிப் பாழைவிட்டு
காய்த்து நொங்காக
இனி வருங்கால
பெடி பெட்டை
வந்து குந்தியிருந்து
நொங்கு உண்ணுமா
நியாயமான கேள்வியுடன்
வடலி
Tuesday, July 2, 2019
வல்லைவெளியில் நடக்க வைரம் பாய்கிறது நெல்லியடியில் இறங்க நெஞ்சு நிமிர்கின்றது!!--பொன்.காந்தன்
காற்று என் காதில்
துறவு மந்திரம் ஒன்றை சொல்லி
புறப்படு என்றது புல்லரித்துப்போனேன்
கறுத்த வஸ்த்திரத்தை அணிந்து கொண்டேன்
என்னினத்தை பிடித்த
தரித்திரங்கள் தொலைய வேண்டி
தொடங்கினேன் யாத்திரியை
வல்லை வெளி கடக்க வைரம் ஏறுகிறது மனம்
நெல்லியடியில் இறங்க நெஞ்சு நிமிர்கிறது
அஞ்சற்க என மில்லர் அவதாரமெடுத்த நிலத்தில்
பிஞ்சு பூக்களை பார்க்கிறேன்
அந்தத் கந்தகத் திமிரில்தான் அவை வேரூன்றியுள்ளன.
பஞ்சுபோல் தோன்றினும்
எங்கோ மூலையில் உறைந்து கிடக்கிறது
அந்த எரிமலை எச்சங்கள்.
வெந்து தணிந்த காட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறது
எங்கள் எதிர்கால இதழ்கள்.
இன்று நரிகளின் காலமாய் இருக்கலாம்
இருக்கட்டும்
விதைகளில் உறங்குகின்றது ஒரு வெளிச்சத்தின் மூலம்.
மடையுடைத்து அது புறப்படும்போது
இந்த மண்ணாங்கட்டிகள் என்ன செய்யும்.
வடையை வாயில் வைத்து
பாடும் காகத்தின் பரம்பரை
இப்போது காலுக்குள் வைத்துக்கொண்டு
கஸல் பாடி கொண்டிருக்கின்றது.
நாளை எதுவேண்டுமானாலும் மாறலாம்
நாம் கல்லுக்குள் ஈரத்தோடு காலத்தை கடந்தவர்கள்
இறுதியில் வெல்வது நாமாகவே இருக்கும்.
இப்போது அங்கிளும் அன்ரியும் வேறு யாராகவும் இருக்கலாம்
இருக்கட்டும்
எங்கள் பிள்ளைக்கு அங்கயற்கண்ணிதான் மாமி
அரியாத்தைதான் அம்மம்மா
யாழினிதான் சித்தி
இந்த உறவு பிணைப்பை
எந்த வாள் கொண்டும் எவனாலும் அறுத்தெறியமுடியாது.
சந்தணமும் எரிமலையும் குளிர் நதியும்
கூடவே பிறக்குமென கனவிலும் கண்டிலோம்.
பிரபாகரனுக்கு மட்டுமே
தமிழன் பிறப்பின் பேருண்மை புரிந்தது.
வெறும் சுடலைக்குப் போய் பிறவி முடித்த பிணங்களுக்குள்
ஒரு தேசத்துறவு இருந்தது பிறகுதான் புரிந்தது
பாடையில் போன தமிழனுக்கு
வாடைக்காற்றில் வீடு கட்டி
வரலாறு முழுக்க வசிக்க வரம் கிடைத்தது எப்படி
தாடி வைத்துக்கொண்டு காதல் சோகம் பாடியே
காலத்தை ஓட்டிய காளைக்குள்
விடியலை கொண்டு வரும் அடிவானம் பிறந்ததெப்படி
அடியில் தேடினால் எங்கள் கொடியின் வேர்
கைகட்டி நின்றதாய் சரித்திரம் இல்லை.
வெடியாய் மாறி மறுபிறப்பெடுத்ததன் மர்மம் அதுதான்
எங்கள் முடிவீழ்ந்தது துரதிஸ்டம்
மூச்சுக்காற்றில் வந்து வந்து கேட்கும் கரும்புலிகளுக்கு
சொல்லும்படியாக
இப்போது வெல்லப்பட்ட பதில் ஏதுமில்லை.
அப்புகாமியோடு கூடிக் குலவுகின்றது எங்கள் மானம்
சப்புச்சவர்களின் வாய்களில் மட்டும்
அடிக்கடி போர் வெடிக்கிறது.
பள்ளத்தை பசை தடவி மறைத்தாயிற்று
மாங்குளத்தை கடக்கும்போது
மனச்சாட்சியை தொட்டுப் பாருங்கள்
எத்தனை பேருக்கு போர்க்கின் முகம் புலப்படுகின்றது.
தேசப்புயல்கள் வீசிய புளியங்குளம் கனகராயன்குளத்தை
கடக்கும்போதேனும்
பேரினவாதத்தோடு சரசம் பொழிபவர்கள் பிறப்பை நினைப்பதுண்டா.
ரங்கன் டாம்போ என்ற தம்பிகளை
எம்பிமாருக்கு நினைவில் உண்டா.
இம்ரான்கானுக்கு கூடத் தெரிகிறது ஈழக்கரும்புலிகள் பற்றி
இங்குதான் சிலருக்கு
கொம்பு முளைத்து குழம்பித் தடுமாறுகிறார்கள்.
ஏமாறுவதற்கெல்லாம் இராசதந்திரம் என்று பெயரிடும்
காமாலைகளாக மாறி விட்;டோம்.
தாறதை தரட்டுமென்ற நிலையில் கூட இல்லை
தந்தால் என்ன விட்டால் என்னவென்ற
தரங்கெட்ட கீழ் நிலைக்கு
உன்னத தியாகங்களை விற்று வியாபாரம் நடத்துகிறார்கள்.
கந்தக தேவர்களின் காவியங்களை
இப்போது இங்கே எங்கே பொருத்திப்பாடுவதென்ற
இதயச் சோகமும் வாட்டி எடுக்கிறது
அவர்கள் மூட்டிய நெருப்பு
அவ்வளவு இலகுவில் அடிமனசுகளில் இருந்து தணியாதென
ஏட்டில் எழுதி தேற்றிக்கொள்கிறது இன்னொரு புறம்!
அப்படி ஒரு இறுதிப்போரில்
எப்படியும் தோற்போம் என பலர் நினைத்தவேளையிலே
பொக்கணையில் வானேறிய
எங்கள் புண்ணியர்களை நினைத்தாயினும் எங்கள் ஈழம் மீளுமா!!

Subscribe to:
Posts (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...