விஜயன் சர்ப்பமானான்
குவேனி கழுகாய் மாறினாள்
தீ பந்தமாய் விஜயன்
எரி மலையாய் குவேனி
அவன் ஊர்ந்தாள்
அவள் பறந்தாள்
விஜயனிலிருந்து
எட்டா தூரத்தில் சஞ்சரிக்கிறாள்
தப்பித்து கொள்ளும்
ஒரு இளவரசியின்
கால போர் இது
நான் இருந்தவள்
நீ வந்தவன்
இடித்து உரைக்கிறாள்
குவேனியை கண்டேன்
ஒவொரு பொய்யிலும்
உயிர்க்கிறாள் உண்மையாய்
இருந்தவளை காணோம்
இருந்தவற்றை காணோம்
இருந்தவற்றை
தேடியவரை காணோம்
இருந்தபடி ஒப்படைத்ததும்
காணோம்
இருந்திராதெல்லாம் விஜயன்
இருந்ததெல்லாம் குவேனி என
பொருள் கொள்ளட்டும் காலம்
அதோ குவேனி
குருந்தூர் மலையடியில்
விஜயன் மரமாக முயல்கிறான்
அவள் புயலாக எழுகிறாள்
நீங்களும்
குவேனியுடன் பேசுங்கள்

No comments:
Post a Comment