Sunday, July 9, 2023

ராணி -பொன்.காந்தன்


பெட்டையா பெடியனா
தூக்கி பார்த்து
பெரிய கடியனாய் வருமென
புகழும் சேர்த்து
கட்டை வாலிது
கண்ணிலும் ஓர் மறை
விட்டு துரத்தும் கள்வனை
வேட்டை ஆடும் கழுத்தை
எட்டி தொட முதல் இறுமுது
இதுதான் வேண்டுமென தூக்கி
கண்ணும் திறக்க முதல்
கடுவன்கள் போக
எஞ்சி இருந்தது இரண்டை
இரவு பையில் கட்டி
இரக்கத்தையும் சேர்த்து நசுக்கி
எட்டமாய் சந்தி தேடி
எவர் கண்ணும் பட்டு விடாமல்
கொட்டி திரும்பும் நாளில்
குட்டியில் ஒன்றை மினி வான்
குடலற மிதித்து சாக
ஒற்றையாய் நின்று ஒன்று
ஓவன்று விதியை நோக
மற்றை நாள் நற்குணத்தான்
மா சீனி பையுடன் வீட்டு
படலையை திறக்க முன்னே
அற்புதம் கிடைத்தது போல்
அழைத்தான் பவளம் இங்கவா
எட்டி பார் பையை என்றான்
எங்கப்பா மலர்ந்து நின்றாள்
இவளினி ராணி என்றான்
பெட்டைகள் சாதிக்கும்
பெரிதாய் ஒரு விதை
குட்டி நாய் வடிவில் முற்றத்திலன்று
எட்டி வளவை
சுற்றும் முற்றும் பார்த்தது ராணி
பிறகொரு நாள்
ஊர் எல்லை வரை
ஓட ஓட துரத்தியது மர நாயை
சுற்றி பாம்பை வளைத்து
சுடுகாட்டு பக்கம் கலைத்தது
அவளின் உரத்த குரலை நம்பி
வருத்தமின்றி ஊர் தூங்கி எழுந்தது
அவள் கால விஸ்வரூபத்தில்
கருவிலே பெண்னெனில்
அவ்வயிற்றை தடவி
வணங்கிற்று இன்று காலம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...