Sunday, July 9, 2023

அடிவானில் ஆச்சியாய் முகில்கள் தோன்றும் அங்கயற்கண்ணியாகி கலையும்-பொன்.காந்தன்

 


மகிளிர் தினம் மாமர நிழலை பாடாமல்
காலடிப்புல்லரிப்புக்கு
கவிதைகளை கொட்டாமல்
வேறெங்கு வியப்பு
வடையும் காகமும் நரியுமா
பாட்டிகளுக்கு பரம்பரை
நேற்றொரு கிழவி வலைத்தளத்தில் வைரல்
வேலை மினக்கெட்டிருந்து
ஏதோ ஒன்றுக்கு வீணி வடித்தபோது
சேலை கட்டிய புயலொன்று
செவிட்டாவடியை பொத்தி தந்துவிட்டது
ஐயனார் கோவில் வரை
ஐந்து இடத்தில் குந்தியென்றாலும் வந்துசேர்வாயா
கை ஊன்றாமல் எழும்ப முடியுமா
பீட்சாவை
பினாட்டு போட்டிக்கு அழைக்கிறது
ஐம்பதிலேயே அவுட்டா
அச்சமும் கூட பரவுகின்றது
சுழிபுரம் பக்கம்
சூட்சுமங்கள் அறியவேண்டும்
புனிதவதி என்ற புயலிடம்
அரிவரியை
மறுபடியும் தொடங்கினால் என்ன
வெட்கத்தை விட்டு
உழுத்தங் களியை
விழுந்து கும்பிடத்தான் வேண்டும்
இதைவிட எப்படி விளக்க
முன்னால ஆச்சி மூசும் காற்று
பின்னால தள்ளுமொடல் வண்டியாய்
தாழிக்காத கறிசொதி
இந்த முறை
வெள்ளை இல்லம்தான் முதலிடம்
ஏழும் ஐந்தும் வெறும் எண்தான்
வாழ்க்கை கோலம்தான் வயது
இந்த விழுது சொல்வது என்ன
காய்த்துக்குலுங்கும் இம்மரத்தில்
கந்தகப்பூக்களும் மலரும்
வேருக்கொன்றெனில்
விழுந்து கிளைகளும் உரமாகும்
மின்மினிகளுக்கு பதில்
மின்னல் மொய்க்கும் இருளை வெல்ல
இடிதாங்கியும் துளிர்விடும்
அடிவானில்
ஆச்சியாய் முகில்கள் தோன்றும்
அங்கயற்கண்ணியாகி கலையும்
மடிகொண்டு தாயாய் இடியாகி எழுச்சியாய்
வெடிகுண்டு மொழியாய்
நில்லாள்
நிறை மாது ஓடிக்கொண்டிருப்பாள்
நேற்றும் அப்படித்தான்
விக்ரோறியாவின் மகாராணி
விட்டிலில்லை வெள்ளைச்சேலைக்குள்
காலம் தவறவிட்ட
ஈழ ஒலிம்பிக்கானது
விழிகளை வியக்க வைத்த ஆச்சி
மகிளிர் திருநாளின் ஒரு சாட்சி

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...