Sunday, July 9, 2023

அரியாசனம் -பொன்.காந்தன்


அப்புவின் குண்டி கழுவி
மூத்திரம் துடைத்து
மலம் அள்ளி
சளி ஏந்தி
வேட்டி மாத்தி
உணவை ஊட்டி விட்ட போது
பெரிதாக எதுவும் தெரியவில்லை
நாள்படவும்
நாலு பேரை பார்க்கும் போதும்
எட்டா உயரமாய் தோன்றும்
அப்புவின் தோளில் இருந்து
நீல வான் நட்சத்திரங்கள்
மட்டுமன்றி
இந்த இதயமும்
ஓர் நிலவாய் தோன்றுகிறது
கண்டிப்பு நிறைந்த
அப்புவின் மனத்தில்
அரியாசனம் கிடைத்து
உடைந்து பெருக்கெடுத்தோடும்
தீரா அன்பின் நதிகளை
ஆள்வது போல் குளிர்ச்சி
சுவரில் தொங்கும்
அப்புவின்
படத்தை பார்க்கும் போது
ஒளித்து வைத்த
பேரழகு புன்னகையை
வேட்டி முடிச்சவிழ்த்து
தருவது போலிருக்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...