அன்னத்துக்கு புள்ளடியிட்டோம்
அறுவாரின் குணம் மாறவில்லை
கம்பரெலியவை தூக்கி காவடியாடினோம்
அலரி மாளிகை விருந்தில்
சிறுநீரையும் குடிக்க சித்தமானோம்
நல்லாட்சி மயக்கம்
பின்னால் இழுபட்டது தமிழ்த் தேசியம்
அண்ணை ரணில் ஆசையப்பு மைத்திரி
ஐநாவரை போய்
தென்னிலங்கைக்காய் தாம்தீம் தளாங்கோ தோம்
ஆளுக்கொரு எலும்புத்துண்டு
அபிவிருத்திக்குழு தலைவர்
அவருக்கொரு இரண்டு வாலும் குஞ்சங்களும்
ஆளாளுக்கு தாராளமாய் விசுக்கோத்து துண்டு
அவிட்டு எறிந்தோம் மானத்தை
கவட்டுக்குள் திஸ்ஸ ரஜ மகா தூபி
தேனிலவு கிறக்கத்தில் தெரியவில்லையது
ஆயிரம் விகாரை விஞ்ஞாபனம்
கலவிசுகத்தில் அதுவும் கூட
தொடைகளுக்கு நடுவில் தொலைந்ததுபோல்
எல்லாம் சுபம்
தையிட்டி விகாரை
தமிழ்த் தேசியத்தின் அன்பளிப்பு
அடிவருடலில் வந்த
ஆயிரம் காலத்துக்குமான தலையிடி
சந்ததிக்கு நம் காலமளித்த சாபக்கேடு
அடிக்கல் நாட்டும்போது
வெடிக்கவில்லை ஏன் சூடு சுரணை
பாராளுமன்றுக்கு முன்
தாராளமாக படுத்துருண்டிருக்கலாம்
ஊரெழு திலீபனின்
ஒரு வீதத்தையாவது செய்திருக்கலாம்
அடுத்த கல் வைக்கமுன்
தண்ணி குடிக்காமலிருந்து தடுத்திருக்கலாம்
தையிட்டியில் எறும்பு கவனம்
குந்தியிருக்கும்போது குஞ்சானில் கடிக்கும்
விடுதலைப்போராட்டத்தில்
அப்படியொரு விழுப்புண்ணேந்தும் விபரீதம் வேண்டாம்
அடுத்த தேர்தலுக்கு தயாராகுங்கள்
நூறு அடியில் நிற்கிறது விகாரை
நூற்றியெட்டு அடியில் எம்பிநின்று பேசுங்கள்
அடுத்தமுறை
ஐந்தாவதோ ஆறாவதோ தடவை
ஐய நீங்கள் தான் எம்பி
சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம்
திஸ்ஸ ரஜவோடு சேர்ந்து செல்பி முக்கியம்
விஞ்ஞாபனத்தோடு சேர்த்தடிக்க தேவை

No comments:
Post a Comment