Sunday, July 9, 2023

கேட்டு கொண்டிருப்பது பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி-பொன்.காந்தன்



ஒரு பொழுது சாய்வதற்கு
இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது
அந்த கொஞ்ச நேரத்தில் தான்
மணி வாழைக்குள்
ஒளிந்து கொள்ளும்
அவளை கண்டு பிடிக்க வேண்டும்
அது ஒன்றும் கடிமானதல்ல
அதற்கு முதல்
கோடி புறத்தில் தேட வேண்டும்
பிறகு
தென்னை மட்டை குவியல் மறைவில்
ஒருமுறை அவளுக்கு அருகால்
கடந்து போய்
கண்டாலும் காணாதது போலாகி
கோழி கூடு வரை
கடை சியாய்
அவளை காண வேண்டும்
அப்போதுதான்
மணி வாழை சிரிக்கும்
ஈர் கோலியோடு
மணி அக்கா
வாசல் குந்தில் இருந்து கொண்டு
புல்டோவுக்கு
ஐம்பது சதம் கிடைத்ததில்
வானில் ஒரு கையும்
காற்றில் ஒரு கையும்
அன்றைய
அந்தி மஞ்சள் உதடுமாய்
புளுதியில்
புதிய வர்ணம் செய்யும்
விரல் களுயுமாய்
தெருவை கடக்கும் காந்தனை
காண்பதுவும் அல்ல
அலாதி
ஈர் கோலியை
கொண்டையில் செருகி
நாயுருவி படாமல் இருக்க
சோட்டியை தூக்கி முடிந்து
பழைய
வார் அறுந்து ஊசி குத்திய
செருப்பை கொழுவி
பேச தொடங்குவார்
யாருடனும் அல்ல
அவர் மன கிடைக்கையை தான்
மறுநாள்
அடி வளவு செடிகள் எல்லாம்
மஞ்சள் வெள்ளை கபிலமாய்
சின்னதாய்
நிறமற்றும் பூத்தன
தொட்டா சிணுங்கி முட்கள்
முனையை தீட்டியும் இருக்கலாம்
ஆடு
பூனாறி செடியில்
ஐந்து முடிச்சு
அதன் பிறகு
வடக்கில் கிழக்காக
தென் வளைத்து சுற்றி
பின்னங் காலில்
தலா இரண்டு முடிச்சு போட்டு
ஊரை கூட்டி கொண்டிருந்தது
சிக்கு எடுத்து
காலையில் கட்டிய செடியை
கண்டு பிடிப்பதற்கு இடையில்
ஆட்டோடு
மணி அக்கா பேசியவை
மொழி பெயர்க முடியாதவை
ஆட்டிடம் தான் கேட்க வேண்டும்
முடிவாய்
ஆட்டை அவிழ்த்து
வீட்டை நோக்கி இழுக்கும் போது
ஆடு அங்கொரு கடி
இங்கொரு நன்னலுமாய் மேயும்
அப்போது
அந்த அறுவானை போலத்தான்
நீயும் என்பார் மணி அக்கா
எந்த அறுவான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...