வருக பொங்கலே;இழையறா பந்தம்
முதலில்
கேட்ட வரங்கள் பல இல்லைத்தான்
கிழக்கு சிவந்தபோதும்
கீழ் வானத்தை இருளப்புகின்றது
பஞ்சரதம் சூழ வரும் எதிர்பாப்பில்
ஒற்றைத்துளிர் கூட இல்லை
அகப்பையில் தணல் அள்ளி பரிமாறியது
வணங்கா முடி சிலிர்த்தது
பேரிலையில் புத்திரரை படைத்தது
சிவந்த விழிப்பார்வையிலே
சிலைகளின் பாவங்கள் கலைத்தது
ஒற்றை நாளொன்றுக்கு
பட்டுடுத்தி பரம்பரை சுகமாளத்தான்
அறிவாயனைத்தும்
அடைக்காக்கின்றேன் என அருளிப்போவின்றும்
நினைவு களைந்து
நீச்சலடிக்கலாம் நிர்வாணமாய் என்கிறார்கள்
வாசம் எங்கோ இருக்கும்போது
பூக்கள் மலர்ந்தென்ன
வெறுங்காலை ஆட்டியென்ன
சலங்கை வேண்டும் தா
அமைதியின் மீது ஆயிரம் புளுக்கள் ஊர்கின்றன
எரிமலையில் இருந்து வீசிய தென்றல்
இலைகளை வருடியிதை இதயம் மறக்கவில்லை
திறப்பது போல வாசல் மூடுகின்றதா
பூஞ்சலருக்கு முன்
காஞ்சிபுரத்தோடு நின்றாலென்ன
கறிச்சீலையை காட்டினால் என்ன
அழைப்பும்;அரங்கமும் அப்படித்தான் விரிகின்றது
பிரபாகரம் துணிவு
புயலும் தென்றலும் நம் வாரிசு
உள்ளிதை உச்சாடனம் செய்யாவிட்டால்
இந்த கச்சைக்கும்
நினைவேந்தல் நடத்திருக்கும்
ஏதோ கூட்டித்தள்ளிய தும்புத்தடியும்
நேற்று துண்டு துண்டாகிவிட்டது
உச்சுக்கொட்டாதே
விட்டுவிடு
உண்ணி ஒரு புறமும்
தெ ள்ளு மறுபுறமும் கழர்வது
நாய்க்கு சுகமென்றால் நல்லதுதானே என்றோர் அசரீரி
மண்டையை கழற்றி
மண்ணெண்ணையில் தேய்த்து காயவிட்டாலும்
கறளும் ஓர் நிறமென்கிறான் ஒருத்தன்
No comments:
Post a Comment