Sunday, July 9, 2023

வீட்டு வாசலுக்கு ஒரு வேப்பம் துளிர்-பொன்.காந்தன்

 

பனையிருந்த இடத்தில்
செடி முளைத்து செட்டுவிடும் பொழுதிது
வெற்றிடம் நிரம்பாத வெப்பியாரம் படர்க்கிறது
கருக்குமட்டைக்கும் கவர்ச்சியுண்டு
நட்சத்திரப்பட்டாளங்களோடு
ஓர் நாள் நடந்தும் போகும்
பூவரசின் தூதனாய் தோன்றும்
தந்திரக்கதிரையில் மந்திரமாய் அமர்ந்திருக்கும்
பிரம்மஞான மலர் சொரிந்த முற்றத்தை
அடவியனால் சிருஸ்டிக்கும்
அதுதான் நிகழ்ந்தும் கிடந்தது நெற்றிக்கு நேரே
ஒரு இரவுக்குள் எட்டடி வளர்ந்தோம் எப்படி
பாலாவின் வரவில் கிடைத்த பாக்கியமது
சுடுகுழலுக்கு ஓரு சுடும் குரல்
வீட்டு வாசலுக்கு ஒரு வேப்பம் துளிர்
காட்டுக்கறுப்பண்டாமல் பார்த்த காத்தவிராயர்
எங்கள் பட்டிக்காடெல்லாம்
பரவிநின்றது பாலசிங்கத்தின் தமிழ்
வருடியும் தொழவில்லை
வளைந்தும் விழவில்லை
வானவில்லாயிருந்தது பயணம்
சூர்ப்பனத்துக்குள் ஆடிய சன்னதத்தில்
மயிரிழையிலிருந்து
மறுபடியும் தேடாவளையத்தில்
அந்தரத்திலிருந்து
இந்திரக்கொடி பிடித்த இதயச்சிலிர்ப்புக்கு
அழைத்துப்போனது அந்நாள்
தேசத்தின் குரலில் தெளிவு
நலிந்திடாத நாதச்செருக்கு
காலம் பரிந்துரைக்கிறது இன்றும்
அன்ரன் பாலசிங்கத்தின் காலடி மண் தொட்டு
களத்தில் இறங்கு
மாட்டுத்தாளிலும் காட்டலாம் மானத்தை
நசிங்கிப்போனால்
மசிங்கிப்போகவேண்டுமென்பது விதியல்ல
சாம கானம் பாடலாம் தேசத்தில் குரலில்
ஆனமட்டும் வேரில் கரைந்தே சென்றது
அந்த விஸ்வாமித்திரம்
இன்று துளிர் சாபம் கலைக்காதா என்ன

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...