இனியும் வேறொன்று காணலாம்
நேற்று போல் கும்ப சரிவு
ஏமாற்றங்கள் ஒன்றிரண்டை
மழையின் நீர் தொட்டழிக்க தொலையும்
மல்லிகை கனி தொங்கும்
வெள்ளையா சிவப்பா
இடப்பழத்தில்
இயல்பு காணும் வரை
ஆதாமுக்கு ஓர் புதிய ஏற்பாடு
வனிலாவா சொக்கிலேற்றா
பெட்ரோல் வாசமும் விருப்பும் வேறு
சிற்றலை சுகத்திற்கு
சிறகு திரும்பும்
முள் முருக்கம் பூ கண்ணுக்கு தெரியும்
தவற விட்ட தாவணி ஒன்று
முகத்தை மூடி வருடி
மோட்சம் உண்டாக்கும்
கோர்வை சாவிகள்
திறக்க ஆயிரம் கதவுகள்
பாசி பூக்கவிட்ட குற்ற உணர்ச்சி
சுரண்டி விட
சொரசொர வென கொட்டும் இதம்
நழுவும் விரல்கள் அலசி
பற்றி கொள்ளும் விமோசனம்
நாளைய நிறம் பூசி கொள்ளும்
நேற்றைய நிழல் விழும்
இப்போதைய சில
அடுத்த தரிப்பிடத்தில் இறங்கும்
அப்பால் பயணம் அலாதி ஆகலாம்
இயல்பு தப்பும் தொட்டாச் சிணுங்கி
முத்தமிட்டால் மட்டும்
மூடி கொள்ளும்
எனினும் குத்தும்
மார்பு சட்டை ஊசி கழற்றி
உள்ளங் காலில் தோன்றும் உணர்ச்சி
தாயெனவும் பொழுது சாய
நிலவு பாலிக்கும்
ஆயினும் மக்காள்
சிங்கத்தின் கால்கள் நரியின் வால்
எருமையின் கொம்புகள்
தும்பிகையுடன் ஒன்று தோன்றும்
என்ன பெயரிட!
எவ்வொலி எழுப்ப!!

No comments:
Post a Comment