Sunday, July 9, 2023

உக்ரெய்னில் போனால் உயிர் உடையார் கட்டிலெனில் அதுவே மயிர்-பொன்.காந்தன்




புட்டினுக்கு பிடியாணை
அலறி அடித்து அறிவித்திருக்கிறது
அப்புகாத்து மன்றம்
ஏய் ஹேக்
மேற்குக்கும் கிழக்குக்கும் மேனி நிறம் வேறாகலாம்
பாதி உயிரில் கிடந்த துடிப்பது
பங்கரில் குண்டு விழுவதும் ஒன்றுதானே
ஐயோ எனும் பாசை அங்கும் இங்கும்
ஆளாளுக்கு வேறுதான்
கண்ணில் விழும் நீர்துளி ஒன்றுதானே
கரிக்கும் இரண்டிலும் உப்பு
பிறகெப்படி உக்ரைனின் போனால் உயிர்
உடையார் கட்டிலென்றால்
உயிர் மயிராயிற்று
மானுட நீதிக்கு
சாணிலும் கூட சமமின்மை இருந்தால்
ஏன் என்ற கேள்வியும் எழும்
எம் பக்கத்திலும் இருந்தும் அதுவரும்
ஏன் புட்டினுக்கு பிடியாணை என்று கேட்கப்போவதில்லை
ரஷ்ய மிக்கின் ரணகளம் அறியும்
இளம்பிஞ்சுகளும்
இரையெடுக்கப்பட்ட சதைகளும்
தலையறுக்கப்பட்ட நம் தென்னை பனைகளும்
பிறகெப்படி பிணையெடுப்போம்
மாஸ்கோவுக்கு இதுதேவைதான்
மனுநீதி காலம் சென்றாலும் தன் கடமையை செய்யும்
ஸ்ரலின் கிராட்டை படித்தபோது
ஏற்பட்ட பேருணர்ச்சி பெருமை
எங்கள் வானை பிளந்த வல்லூறு இரைச்சலில்
வற்றியதும் வறண்டதும் வரலாறு
தாய் நாவலையும்
தடவி எடுத்து படித்தது தமிழீழம்
அவன் இவனென்று பார்க்காது
எவன் கெட்டவனென்று தெரியாமல் ஏமாந்தும் போயிற்று
முள்ளிவாய்க்காலும்
மொஸ்கோவுக்கும் முடியாத கணக்கு உண்டு
வானில் இருந்து பார்க்கும்போது
ஏணை எப்படி தோன்றும் மிஸ்டர் புட்டின்
ஏவுகணை மாதிரியா
சாவை கொடுத்தீர்கள்
முளைத்து மூன்றே இலைவிடாத தளிருக்கும்
பாவமிழைத்தோர்க்கு
பரலோகத்திலல்ல
இங்கேயே இன்னொருவன் தீர்ப்பெழுதுவான்
இப்படியுரைப்பதால்
செலன்ஸ்கி ஈழத்திற்கு சித்தப்பா கிடையாது
செஞ்சோலைக்காய்
உக்ரைன் ஒரு நாள் ஓலமிட்டுத்தான் ஆகவேண்டும்
பக்கிங்காம் பக்கத்திலிருந்து தடவலாம்
வைற் கவுஸ்
நைற்றிலும் அழைப்பெடுத்து நலம் விசாரிக்கலாம்
கடாவுக்கு கைத்தீன் குடுப்பார்கள்
விடாது குழை கட்டுவார்கள்
கடைசியில் வேள்விக்கு இழுத்துச்செல்வார்கள்
அந்த ஆட்டிலொன்று செலன்ஸ்கி
இப்போது காட்டில் மழை
புட்டினுக்கு பிடியாணை
பெரும் புளுகாயும் இருக்கும்
ஆனால் உக்ரெய்ன் வருந்தியே ஆகவேண்டும்
எங்களுர் மலர்களை உருக்குலைத்ததற்காக

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...