Sunday, March 6, 2022

கொக்காரை -பொன்.காந்தன்

 

பன்னாடையொன்றை
பார்த்துக் கிறங்கினேன்
என்னாலை ஏலாது
இலவசமாய் என்றது
கண்ணால சிமிட்டியும்
காரியும் ஆக்கிலேன்
கொக்காரைக்கும் கூட
கொடுப்புக்குள் சிரிப்பு
குசினுக்குள் வரவும்
கூலிதான் கேட்கிறது
சும்மாதான் கிடந்தன
சுற்றி வளவெல்லாம்
என்னவாய் இப்போது
இவ்வளவு கெப்பர்
உண்ணானை கேட்கிறன்
ஒடிச்சு அடுப்புக்குள்
மண்ணெண்ணை பூசி
மாஞ் சுள்ளி வச்சு
பொன்னான காலம்
போனதுதான் எப்ப
தன்னாலயே கெட்டனீ
தரித்திரம் பிடித்தனீ
பின்னால வேலியில்
பெருத்த மரப்பட்டை
கண்ணால கறுவி
கதைக்கிறது கேள்வி
பாவட்டை என்னை
பரிகசித்து நிற்கிறது
மின்சார அடுப்பு
மிக்சி கிறைண்டர்
சம்சாரமெல்லாம்
சமைப்பதே கறண்டு
அம்சமாய் இருந்து
அமத்தி கட்டையில்
பின்னால சிரட்டை
பிரியும் வரை துருவி
பிளிந்து பால் விட்ட
பிரட்டல்கள் எங்கே
பின்னேரமானால்
பேனும் எடுத்தெடுத்து
கண்ணால கண்ட
பட்டை சுள்ளி கட்டை
காய்ஞ்சது முறிஞ்சது
மட்டை பாளை ஓலை
மடக்கி இழுத்துகிடத்தி
குடுத்து முழங்காலில்
முட்டி தெண்டி உடைத்து
அடுக்கி இடுப்பில்வைத்து
அடுப்படிக்குள் குவித்து
அவித்து பொரித்து மசித்து
கிண்டி கிளறி பிரட்டியெடுத்து
ருசித்து சுவைத்து வழித்து
துடைத்து கிடந்து எழும்பி
கேற்றில் வைக்கவும்
கிடந்தது சூடு அடுப்பில்
பூனைபடுக்கவும் இரவு வசதி
காணாமல் போனதெப்ப
கடுப்பு வராதோ எமக்கு
போறவழியில் கிடக்கும்
புளிய மரக்கொப்பு
நாலு கேள்வியுடன்
நானும் வரேனாம்குசினி
நாளைக்கு காஸ் வந்தால்
இந்த பாணியெலாம் மறந்து
காணி மூலைப் பக்கம்
கால் படாதுந்தன்
ஏனென்றும் பார்க்காய்
பன்னாடை கொக்காரை
பற்றையிலும் ஏதும்தேடாய்
எட்டப் போய்த்தூரம்
ஏற்றி இறக்கம் முக்கி
கட்டி மலைபோலேற்றி
கொத்தி விறகுதரும்
கொடும் ஏழையான் பாராய்
கொட்டும் மாரியிலும்
தட்டி வைத்தவுடன்
தணலாய் எரிந்தனம்
விறகு வர்க்கத்தை
வீணாய் நினைத்ததனால்
ஒரு வாய்சோறு சமைக்க
ஒரு பன்னாடை துண்டுக்கும்
ஒன்லைனில் ஓடர்கொடு
ஓசியில் இனிக்கிடையாது
கொக்காரை டொட்கொம் தேடு
எப்போது விழுந்தது வேணும்
எல்லா விபரமும் உண்டு

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...