Sunday, March 6, 2022

சீரியசாய் எடுத்தால் சிரசிலும் அடிக்கும்-பொன்.காந்தன்


ஞானியைப் போல் நடக்கவேண்டியதுதான்
இன்றிரவு பத்துக்கு சுபநேரம்
மறுபடியும் முடக்கம்
பெற்றோல் செற் கொடியேறிற்று
செவ்வாய்க்கு போய்திரும்பவிருக்கும்
அண்டாக்களுக்கும் நிரப்பினான் பெடியன்
அரை மண்டியில் நின்றபடி
அரகேற்ற மேடையாயிருந்தது
அல்சருக்கு மருந்து வாங்குவதுபோல
அவதியிலும் பல
நாற்பது சிசிக்கும்
நாவறண்டு கடும்விடாய்
சீனி வாங்கப்போன இடத்தில்
சிற்றெறும்புக்கு நுழையமுடியவில்லை
இஞ்சி தூரத்தில் பின்னால்
அஞ்சு கிலோவென்று சத்தம்
இஞ்சின் இன்னும் கொஞ்சக்காலமேனும்
ஓடுமெனனப்பார்த்தால்
அதுக்கு வாய்ப்பில்லைபோல
நொக்கடித்தும் நிற்கலாம்
சீரியசாய் எடுத்தால் சிரசிலும் அடிக்கும்
ஞானியாய் கடத்தலே நல்லதுபோல
கல்லிடித்தும் கதை முடியலாம்
செல்லடித்தும் சிதறலாம்
முள்தொண்டையில் சிக்கி மூச்சு நிக்கலாம்
முன்னால ஏதேனுமொன்று முட்டலாம்
காலக்கணக்கை எவரறிவார்
இதுவரை வாழ்ந்ததே இலாபம்தான்
முள்ளிவாய்க்கால் போனவர்க்கு
இது போனஸ்
சுதந்திரபுரத்திற்கு பிறகு
மரத்துப்போய்த்தான் போனார்கள்
மறுபிறவியும் எடுத்தார்கள்
எதையும் எதிர்கொள்ள
ஏதோவொன்று பிறந்தது உள்ளே
அவர்களே அறியாமல் அதிசயமானார்கள்
ஆன்மமே சிலதுக்கு ஆயுதம்
இதுவரை கடக்க வைத்த அஸ்திரம் அதுவே
இப்போது போரிடவும்
அம்புக் கூட்டில் ஆழ் மனதில் உள்ளது
சங்கை ஊதினால் சமராடும்
இந்த சாத்தான் கெரானாவை வெல்லும்
நம்பிக்கையோடிருங்கள்
இதையும் கடந்து நாமிருப்போம்
ஏழைகளுக்கு இரைப்பை இல்லையெனில்
வேளைக்கே வென்றிருக்கலாம்
ஆளையாள் பார்த்துக்கொள்வது
அடுத்தவீட்டான் வயிற்றை அறிவது
பசிக்குதென்றால் கேட்பது
பண்பாடே வைரசுக்கெதிரான வல்லரசுதான்
உண்ட உளுத்தங்களி
உள்ளி இரசம்
கள்ளத்தீன்களெல்லாம் வக்சின்தான்
கட்டுமஸ்த்தில் கண்வைக்காது டெல்டா
கண்டபோது கவசம்போடுவது
காக்கிலோவுக்கு மூக்கும் மூக்குமரசு முண்டுவது
கண்ட இடமெல்லாம் உலவி
கழுவாமல் விழுங்குவது
எல்லாம் இஸ்டப்பட்டது கொரானாவுக்கு
ஈசியாய் வந்தேறியிடும்
அங்கிள் மாமி சித்திபோல
இந்த ஜெனரேசனுக்கு அதுவும் ரிலேசனாம்
இளவு விறுத்தமில்லை வேண்டாம்!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...