வம்பில காலாலடிக்கும்
வாயில சொண்டு வெடிக்கும்
கம்பில வெருட்டியொன்றும்
கட்டுக்குள் நிற்காதென்று
அன்பில தடவிக்குடுத்து
அதன் முலைப்பிடித்திழுத்து
செம்பில கறந்தெடுத்து
சீலையில் வடித்துவிட்டு
தம்பியா இந்தாவென்று
தந்திடப் போத்திலொன்றில்
தளம்பியே சிந்திடாமல்
உஞ்சுகள் உறுமித்துரத்து
ஊற்றியே போட்டிடாமல்
மந்துகள்நிறை தெருவில்
மாலையும் காலையுமாய்
மாட்டுப் பட்டியடி போய்
கொண்டுவந்து வீட்டில்
கொடுத்து விட்டு குந்த
வெந்திடும் அடுப்பிலேத்தி
வெள்ளாடை பிறக்ககாய்ச்சி
அந்தியும் விடியவுமாய்
அருந்திய அத் தேத்தா
நெஞ்சில கிடந்தினிக்கும்
வந்ததே மாப்பெட்டி
வாழ்க்கையே மாறிப்போச்சு
பங்கஜம் சேலைநீக்கி
பால்குடி மறவானென்று
அஞ்சுக்கும் வாரிக்குடுக்கும்
ஆரோக்கியம் எங்கோபோக
குஞ்செல்லாம் கறண்டிலாக
கோடிக்குள் அடைகளில்லை
குப்பையை கிண்டிச்சேவல்
கூப்பிடப் பேட்டுக் கூட்டம்
இப்பநாம் வாறமென்று
இறகினை சிலிப்பிப்போக
குப்பையில் அமத்திவைத்து
குமரியை இழுத்துமடக்கி
எப்பனில் இதம் கண்டு
இறங்கிடும் அந்தச்சேவல்
எப்ப தான் திரும்பவரும்
எல்லாம் மெசினிலாச்சு
பசியிலோ குழந்தையழ
பாப்பாவோ தட்டுப்பாடு
வழியில் தவறவிட்ட
வாழ்க்கைதான் ஒரே தீர்வு!
பழியை யாரில்போட!!
No comments:
Post a Comment