Sunday, March 6, 2022

மாய மழையும் மருந்தான இரவும்-பொன்.காந்தன்

இந்திரலோகத்திருந்து

இறங்கி வந்தார் எவரோ
அந்தரத்தை பார்த்து
அவிட்டு குதிரை கட்டிவிட்டு
சந்திரனையும் கூப்பிட்டார்
மந்திரம் போலும் ஏதோ
மரத்தடியில் இருந்தபடி
சிந்தனையேதோ நடந்தது
பிறகு சிறகு வைத்தவரும்
பறந்து வந்தனர் நூறாய்
குந்தியிருந்து
குடமொன்றெடுத்து குலுக்கினர்
குடித்தும் பார்த்தனர்
பந்தென பூமியை இழுத்து
பக்கமெல்லாம் பூசினர்
சந்தணமில்லையது
சனிரைசர் மாதிரி வேறேதோ
சகல பக்கமும் தடவி
இஞ்சியளவில்
இலங்கைக்கும் எடுத்துரசி
உந்திவிட்டனர் மேலே
உடனே பெருமழை
பூலோகமறியா புதுவாசமதில்
சாயநிறத்திலிருந்தது
மாயமழையில் ஊர் நனைந்தது
மறுபடியும் இரணைமடு நிரம்பியது
வாயடைக்க
வாய்க்கால்களிலும் பாய்ந்தது
கோவிந்தன் கடையடியில்
கோமணத்துடன்
விழுந்து குளித்தது திருவையாறு
நிலாவரையிலும்
நிக்காமலே புதுவர்ணவூற்று
காற்றிலேதோ கசிந்து இறங்கியது
தூத்துவானமாய்
தூயதாய் ஏதோ இதயத்தில் பாய்ந்தது
தீர்த்தமாடியது யாழ்ப்பாணம்
திண்டாடிய கொழும்பு
கொண்டாடியது மழையை
மண்டாடிய கிளிநொச்சியின்
மயக்கம் தெளிந்தது
சங்கு பிட்டியடியில் சனவெள்ளம்
குந்தியிருந்து மூழ்கி
குறுக்கு கட்டோடு கரையேறினர்
பஸ்சிலிருந்து பாய்ந்தோடி
ஆனையிறவேரியில்
எருமை மாடாய் கிடந்தூறினர்
அருந்தியும் தீர்த்தனர்
வற்றாப்பளையில் மீண்டும்
ஒரு குடம் அள்ளிவந்து ஏற்றினர்
ஊரே செகசோதி
முல்லைத்தீவின் முகம் மலர்ந்தது
மட்டுவாவியில்
குத்திக்கரணமடித்தன கிழடுகள்
ஓவர் சிக்ரிக்கு ஓடியது அச்சம்
ஆட்டம் தொடங்கியது
சாபவிமோசனத்தில் மட்டக்களப்பு
கொட்டித்தீர்த்தது மழை
குளிர்ந்து போயிருந்தன தெருக்கள்
செழும்புகள் கரைந்தோடியது
பண்ணைப் பாலத்தில்
பம் வைத்து இறைத்து
பவுசர்களும் கொண்டுபோயின
காரைநகர் பக்கத்தில்
கலியாணவீட்டுக்கு கன்னிக்கால்
சண்டிலிப்பாய் சாமத்தியவீட்டுக்கு
ஆயிரம் அடி பந்தல் ஒடர்
முண்டியடித்தன பேரூந்துகள்
முன்னுக்கு போங்கோவென
கொண்டக்டர் குழறல்
மூத்தவிநாயகரின் பூங்காவனம்
கண்டிக்கு ரூர்
கடற்கரையில் காதலர் கூட்டம்
இன்றைக்கு என்னே மாறுதல்
அங்கபாரடி கொரோனா
ஆத்துப் பறந்தோடுது
அகமகிழ்ந்து
ஆறடிக்கு நீண்டது கை
இப்பவும் தான் கேக்குதோ
எட்டிப் படுத்தாள் பூரணம்
நித்திரை கலைந்தது
மொத்தமும் கனவா
முழித்தார் சுந்தரம்
கலங்கலாகி தெளிந்தது
மாஸ்க்குகள் சுவரிலே

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...