புறப்படவே எப்போதும்
பல்லிகளாய் சொல்லுது
போறியளோ சாகவோ
பூனை குறுக்க துள்ளுது
மனப்படல்லை கைதிரும்ப
படலையைத்தான் தள்ளுது
கொரோனாவோ பலபேரை
தினம் தினமும் அள்ளுது
மனுசருக்குள் கூடுகட்டும்
மரணங்களின் புள்ளிது
கோவக்சின் குத்தினதாம்
கிழவியொன்று சொல்லுது
சாகத்தான் மாட்டனென்று
அதுவும் இன்று நம்புது
மாலாவின் புரியனுக்கும்
மயக்கம் ஒன்று வந்ததாம்
மந்திகையில் கொண்டவச்சு
மாதமொன் றாகுதாம்
ஏலாமல் வந்தாலே
இருக்குமென்றாகுமாம்
ஆளான ஆட்களுக்கும்
அண்டிஜனில் காட்டுதாம்
தண்டிகை முருகனோட
நாலைஞ்சு பேர்கள்
திருப்பலி பாதரோட
அஞ்சாறு பேர்கள்
மாப்பிள்ளை பொம்பிளை
ஏழெட்டுப் பேர்கள்
பெட்டிக்குள் பிணத்தோட
பத்துப் பதினொரு பேர்
சட்டங்கள் நூறு
சாவிலிருந்து தப்ப
கட்டங்கள் பலதாண்டி
கோவிட்டு இப்ப
முறிகண்டியடியும்
வெறிச்சோடிப்போச்சு
முறுகல் கச்சானுண்டும்
கனகாலம் ஆச்சு
வெருகல் பக்கமும்
விளைச்சல்தான் கிருமி
தனிமையில் கிடக்கிறார்
பல பேர்கள் இருமி
திரியுது எங்கும்
கொரானாவோ பொருமி
கசூரினாப் பக்கமும்
காதலர்கள் இல்லை
கற்கண்டு கனியமுதை
காண்பதுவும் இல்லை
எப்போது தொலையுமாம்
இளவிந்த கொள்ளை
அருந்திட வேண்டுமாம்
அணைத்தவரோ கள்ளை
பந்தியில போயிருந்து
பருப்போடு வழியில்லை
சந்தியில் போய்நின்று
சமாவைத்தால் தொல்லை
முந்தியப் போலிடிபட்டால்
மூக்குக்கு சிலிண்டர்தான்
சிந்திக்காமலும் அலைய
செத்தவீடும் தெருவில்தான்
வாற வழியில்
நல்ல வடைக் கடை
நிலைமையோ சரியில்லை
நிண்டு மினக்கெட
No comments:
Post a Comment