வில்லங்கம் குசினியென
வெளிநடப்பு செய்ததாலே
முள்ளங்கி கீரை வறுவல்
மூன்று கறி தாழிப்புபிரட்டல்
சட்டென முட்டை பொரியல்
சனிக்கிழமை கோழிக்கால்
உள்ளத்தை மயக்கவைத்து
ஊருப்பட்ட வகையறாக்கள்
இன்றில்லையென்றுநின்று
ஏவறையும் சொட்டுமின்றி
முந்த நாள் மூன்று நேரம்
முகம் வாட சொதி சோறாம்
ரஞ்சனா ஸ்கூட்டியிலே
ரதமாக தெருவழியில்
வந்து போய் பட்டணத்தில்
வாங்கிவரும் காஸ்சிலிண்டர்
குந்துமே முன் பக்கம்
கூடவே ஆட்டோவில்
கொண்டு வா என்று சொல்ல
குசினிக்கும் வந்துசேரும்
பிந்தினால் அன்றிரவு
பிட்டொன்றும் கிடையாது
அந்தரத்துக்கென்றேதும்
அரை அவியல் போடுதற்கும்
சொண்டுக்கு இனிப்பாக
சூடாக தேத்தண்ணி
முண்டுக்கு ஒரு ரொட்டி
முண்டியேனும் விழுங்குதற்கு
தெண்டித்து இருந்து மூட்ட
தேடினாலும் மண்ணடுப்பு
இன்றைக்கு வீட்டுக்குள்
இல்லாமல் போனதாலே
சண்டைக்கு நிற்கின்ற
சமையல் எரிவாயுவால்
கொண்டைக்கு மேலே
கொழுவி கெல்மெட்டும்
சுண்டலும் சோறோடு
சோலியை முடிப்பதற்கு
வெண்டைக்காய் விரலுக்கு
விபரீதம் ஆகிடுமோ
வீட்டோடு சாம்பலாகி
காடாத்தும் நடந்திடுமோ
மண்டைக்குள் கிடந்து
மரணபய யோசனைகள்
இன்றைக்கு வைத்துலுப்ப
இறைவனின் வரம்கேட்டு
சென்றிப்பொயின்றுகள்
சேர்த்தடித்து முகத்தோடு
மந்திரங்கள் ஜெபம்சொல்லி
மனதை திடப்படுத்தி
கட்டையை திருகியொரு
காஸ் சமையல் ஆவதற்கு
செத்துப் பிழைப்புத்தான்
செமிக்கவில்லை சாப்பாடும்
No comments:
Post a Comment