கொக்கா கோலா வாங்கி
குடிக்கத் தாறனென்று
குஞ்சியப்புவின் மகன்
கூட அழைத்துச்சென்றார்
நக்கல் பேர் வழியவர்
நம்ப முடியவில்லை
உக்கலை கழற்றியுடன்
உரிஞ்சு போட்டுவிட்டு
மைக்கல் ஜாக்சனினை
மார்பில் பொறித்தசட்டை
வண்டிக்கு கீழாயும்
வழுக்கி குண்டியிலும்
பாதி படமின்று காட்டும்
தெண்டியிழுக்குமந்த
தெருக்கூட்டும் ஜீன்சும்
அண்டியிழுக்க வைக்க
அடித்து வாசனை தடவி
ஐந்து நட்சத்திர விடுதி
அழைப்பு வந்ததுபோல்
உண்டிக்கு யோகமென
உடனேறிப் போகையிலே
வண்டி தெருவேறிப்பின்
வாய்க்கால் வழியாக
பண்டிச் சேற்றோரம்
பற்றை பறுகு கடந்து
வண்டும் காக்கையும்
வாயடித்துக்கொள்ளும்
குண்டும் குழித்தெருவின்
குளிர்ந்த பனந்தோப்பில்
எக்கி முக்கி இழுபட்டு
சிக்கிச் சரிந்து நிற்க
மண்டிக்கள்ளருந்தவோ
மாயப்பொடி தூவியெனை
மயக்கி அழைத்தனனோ
என்று நினைக்கையில்
சண்டியை இழுத்து மடித்து
சால்வைபோல் ஆக்கி
குறுக்கால் தொடைக்குள்
குஞ்சியப்பு மகனிழுத்து
கோவணத்தை கட்டி
குழவிகளை கலைத்து
கொக்காரை ஓலைகளை
குலுக்கி விழுத்தியேறி
கருக்குக்குள் நுழைந்து
கவட்டுக்கை கீறாமலமர்ந்து
இடுப்புக்குள் இருந்ததை
எடுத்து அறுத்து விழுத்த
ஐந்தாறு பக்கமாயது
ஆட்டுலறிகளாய் விழ
கொடுக்கு கட்டியகோளாய்
குதித்திதுதான் எங்கள்
குளிரும் கொக்கோகோலா
பந்தாவை விட்டு குந்தி
பற்றையை தட்டி கூட்டி
மந்தாரக்காற்று வந்து
மசிரில் பட்டுக் கூசு
சக்கப்பணிய இருந்து
சாத்துவாயெல்லாம் புரள
ஐந்தாறு நொங்கைதனிய
அதற்குள் விரலைவிட்டு
ஐஸ் கிறீம்போல் எடுத்து
அடிவயிறெல்லாம் குளிர
பின்னால் நுள்ளான்கள்
பிடித்து கிள்ள கிள்ள
உள்ளானுக்கும் போய்
உன்னி நன்னியும் பார்க்க
விண்ணாணமும் பேசி
வெளிக்கிடும் போது
அம்மாணை இதுபோல்
அற்புதமில்லையென்று
அடித்துக் கூறலாம்போல்
No comments:
Post a Comment