Tuesday, May 25, 2021

எச்சம்-பொன்.காந்தன்

 

போர் முடிந்தது
மறுபடியும் மண்மேட்டில்
மரங்கள் வளர்ந்துவிட்டன
காகங்கள்
புணில்களும் வந்தமர்ந்தன
தெருக்களும் பரபரப்பாகிவிட்டன
சந்தியும் சந்தடியும்
புதிய கதைகளில் மூழ்கிவிட்டன
நினைவில்
சொற்கள் நிறைந்து வழிகின்றன
சொல்வதற்கு
அவகாசமற்ற இந்நாளில்
அவ்வப்போது
கோடை மழையிலும்
வீட்டின் கூரையிலிருந்து
முதலில்
காகத்துக்கு கிள்ளிப்படைத்த
இலைகளும்
சோற்றுப்பருக்கைகளும்
முற்றத்தில் விழுந்து
எச்சத்தில் எழுந்த வாழ்வை
எழுதிச் செல்கின்றன

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...