Sunday, March 21, 2021

வியர்வையில் நனைதல்-பொன்.காந்தன்




உடைத்து குவித்து

அழுத்தி பரவி
பூசி மெழுகிவிட்டு
சென்றுவிட்டது
ஏற்றியது இறக்கியது
தள்ளியது
சென்றுவிட்டது
கீறி கிண்டி
தூக்கி நட்டுவிட்டு
சென்றுவிட்டது
மணல் எடுத்து
கட்டையில் பரவி
கத்தியை
இழுத்து தீட்டி
விரல்களால்
கூர் பார்க்கும்
கதியால் வெட்டவரும்
கந்தசாமியை
குந்தியிருந்து
இமைக்காது பார்த்த
கண்களுக்குள்
எப்படி ஓர்
இயந்திரம் புகுந்தது
வியர்வை துடைத்து
கூலியுடன்
வீடு திரும்பும்
கந்தசாமியின்
ஒரு உரொட்டியை
நால்வர் பகிரும்
கனவின் அழகு
இல்லைத்தான் எதிலும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...