Sunday, March 21, 2021

திரும்புதல்-பொன்.காந்தன்



கார்காலத்தின் பின்

செம்மஞ்சள் குதிரைகளுடன்
சிரமமின்றி
அந்தியின் நிஜத்தை
பூசியதின்று முகில்கள்
கடற்கரையில் சுண்டல்காரன்
லாக்டவுணுக்கு பிறகு
யானைகட்டி
புன்னகை வார்த்தைகளை
இழுத்து மல்லுக்கட்டினான்
இனி நாளுக்கு நாள்
அந்தி வானத்தில்
நீல மலைகளில்
ஊதா நிறக் காதலர்களுக்கு
இந்த கடற்கரையில்
வேடிக்கைகள் பல இருக்கும்
புரட்டிப் போடப்பட்ட
உல்லாசப் பொழுதை
யாசிப்பவர் முன்
வித்தைக்காரர் தோன்றுவர்
வெள்ளைத் தேவதைகளோடு
மஞ்சள் கடவுளும்
அந்தி வானில் அக்கணம்
எந்த சிரமமும் இல்லை
கார்காலத்துக்கு பின்
நிஜத்துக்கு திரும்புதலில்
முகம் மூடிய
பஞ்சவர்ண அழகியும் கலைய
நட்சத்திரங்கள் பூக்கும்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...