Sunday, March 21, 2021

மப்பு-பொன்.காந்தன்

அப் பிராணியாய் போய்

அரைக் காலென்று முனகி
வெக்கம் போலவும் குனிந்து
வேண்டித் தீர்த்தமாய் ஏந்தி
அக்கம் பக்கம் ஆள் நோட்டம்
அறிந்தவர் அயலார் துளாவி
எப்படியோ யாரும் காண
எப்பவும் இருந்திற்றெனவாய்
கப்பு மறைவில் போயிருந்து
கண்ணால் சமாளித்துப்பின்
எப்பனும் அதில் விருப்பின்றி
ஏதோ வேப்பங் கசாயத்தை
எடுத்து வாயுதட்டை சுளித்து
பக்குவமாய் பாதியை விட்டு
பகோடாவிலும் கடித்துபடி
மப்புக் கட்டத் தொடங்கும்
மறுபடியும் அரை கேட்கும்
ஊறு காயென்றாலும் சரி
உள்ளே இறக்கி முடிக்க
உதவிக்கிருந்தால் போதும்
முக்கால் வரை பாயும்
முறாய்ப்பும் சிரிப்புமாய்
சக்கப் பணிய இருந்து
சறத்தை இழுத்து செருகி
எக்கச் சக்கம் முடித்து
எழுந்து சரிந்து நிமிர்ந்து
பக்கத்திலுரசி விழுந்து
படுத்து தவண்டு எழுந்து
ஓரடி நகர ஒரு மணியாகி
காவடி பல கரகங்களாடி
கடைசியாய் வேலியோடு
விலா வாரியாய் பேசி
மல்லாந்தெல்லாம் தெரிய
உள்ளான் நிறமும் காட்டி
ஊர்த் தெருவில் கிடக்க
பின்னாலொன்று கோண்
பிறேக்போட்டும் இரண்டு
என்னது வான் சத்தம்
தலகணிக்கு பக்கத்தில்
தார் போட்டது எவனடா!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...