Sunday, March 21, 2021

மாயக்கடல்-பொன்.காந்தன்

 


கடலை மிட்டாய் காரன்
கரை முழுக்க
சூடு பறக்க கூவுகிறான்
காதலியின் கால் தடவிய
கரை நுரையை
பூக்களாக்கியது கவிதை
முத்தங்களின் மயக்கத்தில்
மஞ்சமானது கரை
மறுபடியும்
இந்த மனிதர்களை
கடல் வென்று விட்டது.
குமரிக் கண்டத்தின்
மாடங்களை காட்டி
சில வேளை
மூங்கில் வீட்டில்
புத்தபெருமானின்
சிற்பத்தை மிதக்கவிட்டு
தேர் வடங்களை
கரையில் ஒதுக்கி
சிவலிங்கத்தை காட்டி
பெருந்துயரையும்
புன்னகையாக்கி
வியப்பாக்கி
மறைக்கும் மாயக்கடல்
இப்படியே
மறுபடியும் மறுபடியும்
மனிதர்களை
வென்றே வந்தது
இவ்வாறே
வெள்ளை ரிப்பனையும்
உண்டியல் நிரம்ப
சில்லறைகளையும்
அலையரசியெனும்
படகு அணியத்தையும்
கறுப்புநிற
சீருடை துண்டையும்
நத்தார் பொம்மையையும்
ஒதுங்கவைத்து
மிதக்கவைத்தும்
இந்த கடல்
மனிதர்களை
வென்றே இருக்கும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...