எடுக்க எடுக்க வருகிறது
ஈசுவரி அக்கா வீட்டின்
கோணல் புளி
தெருவோர கூழாம்பழங்கள்
ஈச்சங்காய்கள்
மைகக்கிய பேனாக்கள்
ஹனிபா ரெயிலரின்
காற்சட்டை பைக்குள்
அம்மா அடித்து துவைத்ததில்
எடுக்க முடியாமலும்
ஒரு காதல் கடிதம்
ஹனிபாவின்
அளவு நாடா அறியாத
ஆழத்தில் புதைந்த
ஆயிரம் இரகசியங்கள்
இன்னும்
என்னென்ன வைப்போம்
வீசா காட்
பார்மசி மருந்து துண்டு
வியர்வை படாத
கைக்குட்டை
இப்படி.......

No comments:
Post a Comment