நிறப்பிரிகை
பாடம் நடத்தும்போது
மூன்றாவது பெஞ்சில்
மஞ்சள்
ஆங்கில பாட வேளையில்
அதே பெஞ்சில்
ஏஞ்சல்
தமிழ் வகுப்பை
சொல்லவும் வேண்டுமா
தமயந்தி சீதா மாதவி
ஓவிய பாடத்தில்
அதே பெஞ்சில்
மோனாலிசா
கரும்பலகையில்
தவறவிடப்பட்ட
பசங்களின் பார்வை
அர்த்தம் இல்லாமலில்லை
சோதனைகளும்தான்
நிறப்பிரிகை
வண்ணங்களாய்
வாழ்க்கை பயணத்தில்
இலையுதிர்கால
பழுப்பு இலைகளிடையும்
மஞ்சள்
பருவங்களில்
தவறவிடக் கூடாத
அந்த ஓரப் பார்வையில்

No comments:
Post a Comment