கொப்பித் தாளை மடித்தால்
ராக்கெட்
தென்னங்கீற்றை இழுத்தால்
கடிகாரம்
கள்ளி இலையை ஒடித்தால்
கீரிபாம்பு
பூவரசம் இலை பிடுங்க
நாதஸ்வரம்
குரும்பட்டிகள் சேர
தேர்
தீப்பெட்டிகள் தீர்ந்தால்
இரயில்
ஒரு வசந்த காலம்
புளியமரத்தின் பின்
ஓடி ஒளிந்து காத்திருக்கிறது
வெகு காலமாய்
புளிய மரத்துடன்
ஒரு செல்பி
போகிறது காலம்
வசந்தங்களை
பின்னால் வைத்துக்கொண்டு
எங்கு!

No comments:
Post a Comment