குளத்தில் மீன்கள் இல்லை
பத்மநாதனின்
சைக்கிள் மணியில் நீந்தும்
இளவரசியின்
காதல் மயக்கத்தை பிடிப்பதில்
ஏமாற்றம் எனக்கு
மணியண்ணை கடையின்
பழைய
படித்தராசின் திருப்தி
கடிதம் எழுதிவைத்துவிட்டு
இரவோடிரவாய்
காதலனோடு ஓடியவளின்
சுவாரஸ்யம்தான்.
வாழ்வதற்கு துணிந்த
ஓடுகாலிகளுக்காய்
வலை வீசுகிறது மனம்.
பட்ட மரங்களிலெல்லாம்
கனவுளாய் வந்தமர
கொக்குகளுக்கும் தினம் தூது
குளம் நிரம்பியது
ஏதோ உண்மைதான்
வற்றிய நம்பிக்கைகளுடன்.
தூண்டிலின் முனையை
தூக்கி பார்க்கிறேன்
தவளைகள் ஏதுமின்று
தற்கொலை செய்தனவா என்று

No comments:
Post a Comment