செப்ரெம்பருக்கு பின்
சிறுக்கி வருவதாயிருந்தாள்
பரிதாபம் பிறகு இங்கு
பஸ் நம்பர் குறிக்கவேணும்
பக்கத்திலிருந்தவரின்
பழைய டயறி தெரியவேணும்
முச்சக்கரி வண்டிபிடித்தால்
முகவரி விசாரிக்க வேணும்
வெறுங்கையோடு எப்படி
கச்சேரி ஒழுங்கையடியில்
கடையில் ஏதும்விசுக்கோத்து
கண்டோசு வேண்டினால்பிறகு
அது விலாசோ ஸ்ரோறோ
முனா முன்னுக்கிருந்தவர்
கடதாசியில் சுருட்டி மடிச்சு
இழுத்து சொப்பினில் இட்ட
இளந்தாரிப் பெடியன் யார்
மிக்சர் பைக்கற்றொன்றும்
மிச்சத்துக்கு ஒரு சின்ன
பகோடாவும் எட்டி கேட்டு
பக்கத்தில் உரஞ்சினின்று
கட்டிங் இரவு போடும்
கசிப்பு வெடிலனையும்
கடைவிழியாலறிய வேணும்
பத்துப்பன்னிரண்டு பக்கம்
பயணக் குறிப்போடு
கட்டுரை ஆசிரியையாகி
வந்திங்கு சேர்வதென்றால்
முப்பத்தெட்டு விதிமுறை
முடிவாய் அத்தான் நான்
அக்டோபரில் வாறேனென
அவளுரைத்தாள் பிறகும்
ஆண்டுதான் தெரியாது
இளவு கொரோனாவுக்கு
இளந்தாரி வருத்தங்கள்
எதுவும் புரியாது.
No comments:
Post a Comment