Thursday, December 24, 2020

பொக்கிசம்-பொன்.காந்தன்


 

சின்ன வயதில் அப்பா
அதை தொடவிடுவதில்லை
அது பற்றி அப்பா
தன் சின்ன வயதுக் கதையை
நிலவொளியில் சொல்வார்
பிறகு தொடாமலே
எட்டி நின்று பார்த்தேன்
எப்போதும்
அது பூட்டியபடியே இருந்தது
திறக்க ஆசைப்பட்டபோதெல்லாம்
அப்பா
அப்பம்மா என்னவெல்லாம்
அதில் வைத்ததை சொன்னார்
எனக்கு
என்னவெல்லாம் அதற்குள்
வைக்கலாமென புரிந்தது
இப்போதும்
அப்பாவின் நினைவாய்
பூட்டியபடியே இருக்கிறது
முதிரையில் செய்த
அந்தப் பெட்டகம்
இப்போதும்
அதற்குள் ஒன்றுமில்லை
ஒரு நீண்ட
கதை இருக்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...