ஏதோ
சில மஞ்சாடிகளென்றான்
அடகு கடைக்காரர்
எப்பவோ
மூக்குத்திக்கு எழுதிய கவிதை
இல்லை
தேவதைகள் அணிவதென
அடம்பிடித்தது
ஏதோ
சில தாள்களை நீட்டினான்
இரவின் இரகசியம் குளைத்து
நாணம் பூசியதற்கு
இவ்வளவுதானா
முனகும் சொர்க்கத்தின்
மூச்சு வாங்கும் தவிப்புக்கு
இவ்வளவுதானா
இப்படித்தான்
மூக்குத்திக் கவிதைகளின்
முடிவு வரிகள் பல
சிவந்த மூக்கின் நுனியில்
தூர்ந்தபடியே
மோகத்தை தீட்டமுடியாத
தீராத ஏக்கத்துடன்

No comments:
Post a Comment