Thursday, December 24, 2020

பொத்திவைத்து-பொன்.காந்தன்



புதிர் போடும்
சின்னக்கைகளை
திறந்தபோது
ரொம்ப
காலத்துக்கு முன்
பட்டாம் பூச்சி பறந்தது
ஏதேதோ
இருப்பதாய் சொல்லி
ஏமாந்தபோதும்
அந்த கைகள்
புதிதாய் அழகாய்
ஏதும்
சொல்ல வைத்தது
இலை என்றால்
பூக்கள் இருந்தது
எங்கே
அந்த கைகள்
எந்த அற்புதத்துடன்
எங்கே
தொலைந்தது
இப்போது
மின்மினி என்றால்
நட்சத்திரமிருக்கும்
பறவையென்றால்
வானமிருக்கும்
நம்புகிறேன்
அந்த கைகளை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...