Thursday, December 24, 2020

மழைவாசம்-பொன்.காந்தன்



கார்காலங்களில்
நெடுந்தீவு அப்புவின்
முகடு கட்டும் இலாவகத்தில்
கிடுகு வேய்ச்சல்
கதகதப்பை
எப்போதும் பறித்ததில்லை
சுகமான
ஒரு தூக்கத்துக்காக
மழைத்துளிகளை
தாழ்வாரங்களில்
நயாகராவாய் வீழவைத்த
அந்த கிழவனுக்கு
இக்கார்காலத்தில் நன்றி
இழைக்கயிறுகள் ஓடி
ஈர்க்குகள் மிச்சத்தையும்
மூக்குப்பேணியை தந்துவிட்டு
கோவணத்தோடு
கிழவன் போனபின்தான்
மண் வாசமாயிருக்கும்
மழைவரும்
இப்போது
நம்பிக்கைகள் பல
சிதலமாகி
எல்லாம் ஒழுகி விழும்
வாழ்க்கையின் மேல்
வேய்கிறவனை
தவமாக்குகிறது
உலரவிட்டு மறந்த
கொடியின் ஆடைகளை
வரமாக்குகிறது
மழையின் நினைவுகள்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...