உடுவில் தெல்லிப்பளை
சங்கானை சண்டிலிப்பாய்
நல்லூர் கோப்பாயென்று
ஊரெல்லாம் கொரொனா
தொகுதி தேர்தலில்
தொடர்ந்து எண்ணப்படும்
வாக்கு அறிவிப்பாய்
கிருமி பிடித்த தொகை
இருமினாலும் பயம்
விடுகாலி வா கெதியாய்
விசுவலிங்கம் பேசுகிறார்
அறுவானே அலையாதே
ஆளோடு சேர்ந்து அது
சீலம்பாய் சீவிக்குதாம்
கத்தரிக்காய் பால்கறிக்கு
கனகலிங்கம் ஆசைப்பட
செத்துக்கெட்டாலும் அது
சிரிச்சுச் சாப்பிடட்டும்
சொத்துப் பத்தெதற்கு
சோறு கறி வடிவாய்
வதக்கி தாழிச்சு மசிச்சு
சமைச்சு கொடுக்கவென
உடுக்கச் சுகமென்று
இடப்பெயர்வுக் காலத்து
இறுதி ஏற்பாடாய் வந்த
கனகலிங்கம் தம்பதியின்
கடைசிப் பெட்டையின்
இடுப்புக்கு அளவான
பழுப்பு நிறச் சுடிதாரை
இழுத்துக் கொழுவிப்பின்
அழுத்திக் கைபேசியில்
அழைத்து ஆட்டோவில்
புளுக் குத்தல் முத்தல்
மூள் அழுகல் சுருக்கம்
அல்லாதபடி கத்தரிக்கு
சந்தைக்குள் அலைந்து
சமாவும் கூட வைத்து
கையோடு உள்ளிமிளகு
கருவேப்பிலை சீரகம்
இன்னும் பல தோடு
ஏழெட்டு கடைகள் ஏறி
வந்து வீடு சேர்ந்து
வதக்கி தாழிச்சிருக்க
மருதனார் மடத்திருந்து
மாறி மாறித் தாவி
கத்தரிக்காய் வாங்க
கனகலிங்கம் பெண்டில்
பத்து மணி போய்வந்த
பக்கத்து சந்தைவரை
பாழாப் போன இளவு
பரவி வந்திற்றாம்
கத்தரிக் கொத்தணி
கனகரோடு பெண் சாதி
பெட்டை பெடியன் இரண்டு
மொத்தம் பத்துப் பேராம்
சொல்லிப் போட்டனடா
சுறுக்காய் வீட்டை வா
சுத்தித் திரிஞ்சு வாங்கி
சோதனைக்குள் சிக்கி
சித்தி பெற்று திரும்பும்
சீவியத்தை நினைக்க
இழுத்து மிதிக்கவேணும்
ஏமாலாந்தும் உன்னை
விடுகாலி கெதியாய்வா
விசுவலிங்கம் பேசுகிறார்.
No comments:
Post a Comment