Thursday, December 24, 2020

கடைசி எழுத்து-பொன்.காந்தன்

 


இதுவரை அவசரமில்லை
முற்றத்தின் செடிக்கு
இதழ்களை அவிழ்ப்பதில்
எந்த தடுமாற்றமுமில்லை
காத்திருக்கும்
வண்டுகளின் போதையில்
பட்டாம் பூச்சி சிறகும்
தள்ளுவண்டியாகி
ரிக்சாகவில்லை
இழுத்து நிறுத்த முனையும்
இதயத்தில் எஞ்சிய
ஒரு சில பனித்துளிகள்
பாய்ந்த முடிக்க நினைக்கும்
இரைச்சல் மிக்க காட்டாறு
எங்கிருந்தோ ஓடிவரும்
மரங்கொத்தி
இரண்டொரு கொத்தில்
மறுபடியும்
சொல்வதெல்லாம் என்ன
ஆட்காட்டியை நம்பாமல்
யாரையோ தேடும் விழிகள்
அடுத்த போகத்திற்கு
மழைபெய்யுமா
நம்பிக்கையற்ற வானம்
காத்திருப்பை எல்லாம்
மாநகரசபை குப்பை லாறியில்
மூட்டையாக்கிவிட்டு
முகிழை அவிழ்க்கிறது விரல்
தேனில்லை
திருப்தியும் இல்லை
பனிகலையா வேளை
போர்த்தியபடி முதலில்
கதகதப்பை சூடிக்கொள்
அனுபவத்தின் கடைசி எழுத்து
முயன்று பார்க்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...