Thursday, December 24, 2020

கற்பூரமென்றொரு குரல்-பொன்.காந்தன்


கடைப் படியில் நின்றபடி
சற்றே திரும்பினேன்
கை நடுங்குமோர் கிழவி
பத்தியொரு பெட்டி
பற்றவைக்க தீப்பெட்டி
சிட்டியொன்று
சொல்லி முடித்தாள்
எத்தனை பேரணை
இரகசியமாய் கேட்டேன்
இளையது ஆனையிறவில்
எண்பத்தேழில் ஒன்று
இன்னொன்று கடலில்
உன்னைப்போல் தாய்க்கு
ஒரு பதில் இல்லை
மன்னிப்பாய்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...