Thursday, December 24, 2020

பெருங்காலம்-பொன்.காந்தன்

 


இறகுகள் இலைகள் கோதுகள்
பட்டைகளென
கொட்டிக்கிடக்கிறது முற்றமெலாம்
கூட்டி ஒதுக்கி
வாரி புதைக்கிறது பொழுது
புதைப்பதற்கு நிலமின்றி
தேடி அலைகிறது
பொய்யை மாயையை
வர்ணங்களை எல்லாம்
அரிக்கிறது ஓர் உண்மை
நிழல்களையும்
மூடிக்கட்டி கொட்டி குவித்து
மூலஸ்த்தானங்கள்
சந்துகள் பொந்துகள்வரை
காதுக் குடும்பியென
குடைந்து இழுக்கிறது
சுரூபங்கள் சிலைகளின் கீழ்
சிலந்திகள் உதிர்ந்தவை
போர்வை கம்பளங்களில்
காலாவதியானவைகள்
கிரீடங்களிலும் மங்கியவை
புத்தகங்களிலும்
வார்த்தைகளிலும்
மறைத்து உதிர்ந்தவை
பூச்செண்டை
ஏமாற்றிய சாலைகளில்
வெளுறுகின்றன
வார்த்தைகள் ஜாலங்கள்
எல்லாம்
உதிர வேண்டுமெனும் குரலோடு
மலர்ச் சாலைகளும்
உதிர்வின் பெருங்காலமிது
வன்மங்களுக்கு பதிலாய்
பன்னீர் புஸ்பங்களையும்
இலையின் துளிரையும்
உதிர்த்துப் பரப்பி
வேர்வரையும் வலியுணர்த்தி
போகுமாம் இக்காலம்
புதிதாய்
ஒரு பொழுதுணர்த்தி.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...