பிறண்டிக்சில் புறப்பட்டு
பெகலியகொடவில்தாவி
வண்டிகளில் தொற்றி
வரும்வழியெலாம் தடவி
நண்டுக்கறி தின்னப்போய்
நல்ல இறாலும் பாத்தூறி
என்ன விலையென்று
ஏறியிறங்கி மீன் சந்தை
வந்து போனவருக்கெலாம்
வஞ்சகமில்லாமல் தொற்றி
கொண்டு கிளப்பி ஆடும்
கோதாரி கொரோனாவால்
நொந்துபோன கதைகேட்டு
சந்து பொந்தெல்லாமது இனி
சரிக்கட்டிவிடும் ஆளையென
வெந்து போன மனதில் வந்த
வேறு பல யோசனையில்
மந்து பற்றிக் கிடந்த பழைய
மக்காட்டாடும் ஈருருளியெடுத்து
குந்தியிருந்து கோடிக்குள்தேடி
குசினிப்பக்கத்தால் எறிந்த
குறைச் சிரட்டையில் கொஞ்சம்
மண்ணெண்ணை விட்டு தொட்டு
கம்பி றிம்மெல்லாம் தேய்த்து
கறள் செயினுக்கும் நனைத்து
இந்துபோன சீற்கவரை இழுத்து
பந்தொன்றை கீழே வைத்தும்
கொட்டப்பின்னை அடித்திறுக்கி
குதிக்காலால் தெண்டிபெடலை
அச்சுக்குள் ஆட்டங்கள் பார்த்து
அங்கையிங்க திருப்பிக்காண்டில்
அமத்தி பிறேக்கட்டை பார்த்து
இன்று முதல் ஈருருளியில்தான்
சென்று வரவேணும் வேலைக்கு
என்று மனதில் எண்ணியவரின்
நெஞ்சுக்குள் ஏதோ புதுநிம்மதி
அண்டியிருந்து பேருந்துகளில்
அனுதினமும் ஏறிப்போயங்கு
முண்டியடித்து இறங்கமுதுகில்
மூச்சின்றி கோவிட்டும் வரும்
சண்டி கட்டி சந்தி தெருவிலினி
உந்திமிதித்து ஊருக்குள்ளும்
மிதி வண்டியில் தான் எல்லாம்
மேனியும் கொஞ்சம் இளைக்கும்
கண்டறியாத ஸ்கூட்டிபல்சரென
கவட்டுக்குள் தூக்கி வைத்து
தொந்தி வைப்பதும் தெரியாமல்
தொலைத்துடல்வாகும் கெட்டு
நன்றிக் கெட்டவராயிருந்தோம்
உயிலங்குளம் பள்ளமடு கொம்படி
ஓமந்தை ஒட்டு சுட்டான் பூநகரி
பளைமீசாலை பரமேஸ்வராசந்தி
குடும்பம் பிள்ளை குட்டி பூனை
பாய் பெட்டி படுக்கை பானை
வன்னிப் புளுதி முழுக்க ஏற்றி
இறக்கியெமை வாழ்வித்த ஈருருளி
வாயிருந்தால் அழுதிருக்கும்
வடக்கு கிழக்கு தமிழர்களின்
வயப்பட்ட வாகனமாயெங்கும்
பள்ளம் புட்டி எல்லாம் ஓடி
பத்தைபறுகெல்லாம் தடவி
ஒத்தையடி தெருவிலுமிறங்கி
ஒழுங்கை மாறிவிட்டு நாய்
உறுமி பாய ஓடித் தப்பவும்
வல்லமையாய் இருந்ததுமீள
வாசலில் இறக்கித் துடைத்து
முற்றத்தில் நிறுத்தி கொஞ்சம்
முன்ரயரை அமத்தி பாத்து
புத்தகக்கட்டு கோவைகளை
பின் கரியலில் கிளப்பிவைத்து
முன்னுக்கு பைகளைகொழுவி
அங்கபார் ஏரம்பர் இளையதம்பி
எல்லாம் ஈருருளியில் என்று
காது குளிரக் கேட்டுப்பார்க்க
டாக்குத்தர் குணம் தவம் மலர்
பிறகு சில பிறின் சிப்பல்களும்
எப்பவுமொரு இலான்சரில்
சீறிக்கடக்கும் ஸ்ரெலா ரீச்சரும்
எக்கியுழக்கியந்த ஈருருளியில்
கொண்டு வந்து அக்காலம்
தந்து தெருவில் சிலிர்க்க
நொந்துபோன திருத்தகம்
நோட்டமிட்டு யாவையும்
அடித்து காற்று நிரப்ப
ஐம்பது சதம் போலின்றும்
அன்பளிப்பாய் வாங்க
மாட்டுவதற்கோர் மட்டை
ஓட்டைபோடுகிறார் ஓரம்
இருந்தும் மாரி வருகிறது
எட்டாக் கால் வயதில்
எழும்பி உழக்கியொரு நாள்
இரண்டுபெடலும்வழுக்கி.

No comments:
Post a Comment