Tuesday, July 7, 2020

ரிசுவின் புன்னகை-பொன்.காந்தன்,


ஒரு மகிழ்ச்சியான நாள்
ஈர்க்கின் மீது
கடதாசிப்பூவாயிருக்கிறது.
தவணைத் தேர்வில்
வேறு எதுவும் நினைவில்லை
விசுக்கோத்து
பெட்டி வீட்டில்
குணா டெய்சி சுகந்தி
சுகிர் செல்வா உதயனை
நிற்க வைப்பதில்
ஒரு ரிசுதாளின் புன்னகை
எனது
உதடு வரை நீள்கின்றது
சசியின்
கிணற்றுப்புட்டி
மண் பிள்ளையார்
மூன்றாம் வகுப்பு
மேசையிலிருந்து
கொடுத்த வரங்களில்
எங்கும் வியாபித்தது
கமலவேணி காந்தி
ரூபி ரீச்சரின் புன்னகை
ஒரு மகிழ்ச்சியான நாள்
பாளையில் செய்த
திருவரனின் படகுக்கு
துடுப்பு வலிக்கின்றது
கொந்தளிப்பற்ற
ஒரு அழகான கடல்
அலைகளை போல
சிறாணியின் புன்னகை
தீப்பெட்டி கோச்சியில்
திரும்ப திரும்ப வந்திறங்கும்
அந்த ஒரு நாள்
ஒரு நாள்
நாங்கள் கடவுள் செய்தோம்
ஒரு நாள்
வீடு கட்டினோம்
ஒரு நாள்
பூக்களை மலர வைத்தோம்
நாங்கள்
அப்சன்ற் இல்லாத
ஒரு அழகான நாள்
வேறெதுவும் நினைவில்லை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...