Tuesday, July 7, 2020

அத்தியாயமொன்று!-பொன்.காந்தன்,


பட்டிக்காட்டு அம்மாக்களின்
முதற்கட்டளை
கும்பிடு பூச்சியை
ஒரு போதும் அடிக்காதே
மங்கிய லாம்பு வெளிச்சத்தில்
புத்தக பக்கங்களில்
நம்பிக்கையோடிருந்தன
ஏராளம் கும்பிடு பூச்சிகள்
ஒரு அழகான பாடம்
புத்தகங்களில் இருக்கவில்லை
முழங்கால்களுக்கு இடையில்
நசுக்கப்பட்டு
மனிதன் சாகும்போது
ஒரு பெரிய புத்தகத்தை விரித்து
அச்சமும் ஏக்கமும் நிறைய
காத்திருக்கிறேன்
கும்பிடு பூச்சிகளுக்காக
வருமா
அத்தியாயமொன்று
கும்பிடு பூச்சி
புத்தகங்களில் இல்லை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...