முதல்
முற்றம் முழுக்க பரவியிருந்தது
பிறகு
பழைய இடிந்த
மண்கிணற்று பக்கமிருந்தது
வீட்டுக்கோடிக்குள்
ஆங்காங்கு கிடக்கும்
போத்திலோடுகள்
முட்களிலும் இருந்தது
தேங்காய் விழும்
முற்றத்து தென்னையில்
சரிந்து கிடந்த
பலாமரம் பக்கமுமிருந்தது
கார் காலத்தில் குடையில்
துவட்டும் துணியில்
வேகமாய்
வாகனங்களோடும்
சாலைகளிலுமிருந்தது
பிறகு
அநேக பொழுதுகளில்
படலையிலையே இருந்தது
கடைசிவரை
அம்மாவின் கண்கள்
முகத்தில் இருந்ததில்லை
No comments:
Post a Comment