குருக்கள்
திரைச்சீலை நீக்கும் போது
முதலில் எனக்கு
மேவினும் குட்டியும் செல்வியும்தான்
தோன்றுகின்றார்கள்
உசக்கால பூசை நேரம்
பள்ளிக்கு ஆயத்தம்
கால சந்தியில்
கௌரி ரீச்சரின்
முதல் பாடவேளை கணிதம்
உச்சிக் காலத்தில்
பள்ளிக்கன்ரினில்
ஏதோ வடையோ தேனீரோ
எப்படியாயினும்
கோவில் கட்டும் காலத்தில்
சாயரட்சைப் பொழுது
கர்ப்பக்கிரகத்தில்
அடிக்கடி முதலில்
நாங்கள் நால்வரும்தான்
ஒளித்துப்பிடித்து விளையாட
அதுவும்
தோதாக இருந்தது
நால்வரும் சேரும்
அந்த அந்திப்பொழுது
எப்பொழுதும்
பிரம்ம முகூர்த்தம்தான்
நாம் விளையாடி களைத்து
உட்கார்ந்த கல்லில்
ராசியும் நட்சத்திரமுமாய்
மலர்கள் சொரிய
இன்று
கற்பூர ஆராத்தி ஒளியில்
என்னை கண்டு பிடித்தீரா
கடவுளே!

No comments:
Post a Comment