ஒரு பொழுது நானும் அமேசனின் பிள்ளையாய் இருந்தேன்.இன்றும் இருக்க ஆசையுண்டு.பழங்குடிக்குப் பிறந்தவனே என்று அழைப்பீர்களா கொஞ்சநேரம் .சில கணம் நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்.காட்டுத் தெருக்களை காதலித்த நாட்களை எழுவதற்கு ஏதோ ஒரு ஆலாபனைக்காக அமேசனை இழுத்தேன்.ஆனால் நண்பன் சங்கரபாண்டி சசியின் மீது எனக்குள்ள பொறாமை நான் இந்த நகரத்து நெரிசலில் வியர்த்துப்போய் விசிறியை முதுகுக்கும் முகத்துக்குமாய் திருப்பி முடியாமல் கடைசியில் ஆடைகளை அவிழ்த்து ஓடவேண்டும்போல இருக்க அவன் தினமும் அமேசனின் புத்திரனாய் நண்பனாய் நாயகனாய் வாழ்கிறான்.எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் என்பார்களே.காடுகளோடு அருகில் வாழ்வதற்குமா அது வேண்டும்.அதுவரமா சாபமா என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் அது ஏதோ ஆசுவாசத்தை தரும் அமைதியையும் தரும் என்பதுபோல் எனக்கு உணர்வு.கற்பனையில் மிதப்பது என்பார்களே அது சிலருக்கு ஏதோ அது எட்டமுடியா உயரத்தில் இருந்தாலும் எனது மிதப்பெல்லாம் கூப்பிடு தூரத்தைவிட கொஞ்சம் அதிக தூரம் அவ்வளவுதான்.
நாம் தினமும் ஆனைகளோடும் பாம்புகளோடும் ஓநாய்கள் மயில்கள் மான்களோடு ஓடிப்பிடித்து விளையாடுகிறோம்.இவன் ஏதோ பட்டணத்தில் பரபரக்கின்றான் என்று
என்னை பார்த்து கானகத்தோடு அண்டி நிலம் புலம் வைத்திருப்பவர்கள் ஏளனமாய் சிரித்தாலும் நான் வெட்கப்படுவதாயில்லை.கடந்த காலத்தில் என் நண்பர்கள் தோழிகள் பலர் அமேசனின் பிள்ளைகளாய் தீட்சை பெற்றுக்கொண்டு ஒரு மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு மணலாற்றிலும் நெடுங்கேணியிலும் குடுமி மலை ஓரங்களிலும் மாந்தையிலும் ஒட்டுசுட்டானிலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள்.இன்றைக்கும் உயிரோட இருக்கும் அவர்கள் அயர்ந்து உறங்கும்போது ஓங்கி வளர்ந்த ஒரு மரநிழல். முற்றம் போல கூட்டி அழகாக்கிய ஒரு பெரிய பாலை மரத்தடி. சாய்ந்தபடி வீட்டை உறவுகளை ஊரை நண்பர்களை நினைத்துப்பார்த்த பருத்த கருங்காலி கனவில் வராமல் இருக்கப்போவதில்லை.
என்னை பார்த்து கானகத்தோடு அண்டி நிலம் புலம் வைத்திருப்பவர்கள் ஏளனமாய் சிரித்தாலும் நான் வெட்கப்படுவதாயில்லை.கடந்த காலத்தில் என் நண்பர்கள் தோழிகள் பலர் அமேசனின் பிள்ளைகளாய் தீட்சை பெற்றுக்கொண்டு ஒரு மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு மணலாற்றிலும் நெடுங்கேணியிலும் குடுமி மலை ஓரங்களிலும் மாந்தையிலும் ஒட்டுசுட்டானிலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள்.இன்றைக்கும் உயிரோட இருக்கும் அவர்கள் அயர்ந்து உறங்கும்போது ஓங்கி வளர்ந்த ஒரு மரநிழல். முற்றம் போல கூட்டி அழகாக்கிய ஒரு பெரிய பாலை மரத்தடி. சாய்ந்தபடி வீட்டை உறவுகளை ஊரை நண்பர்களை நினைத்துப்பார்த்த பருத்த கருங்காலி கனவில் வராமல் இருக்கப்போவதில்லை.
அவர்களுக்கு பின் இருக்கின்ற எங்கள் அர்த்தமுள்ள அமேசன்களை போல என்னுடைய கனவுகளில் கிளைகள் காற்றில் அசையாவிட்டாலும்.ஒரு பொழுதில் பதினெட்டாம் போர் ஏற்றங்களில் தோழர் தோழியர்களோடு பேசியபடியே பழைய முறிகண்டி காட்டுத்தெருக்களில் திரிந்து தனித்திருக்கின்ற கிணற்றில் குளித்து காட்டுப்புல்களின் மேல் ஆடைகளை உலரவிட்டு காட்டு வெயிலில் தலை காய்ந்து காட்டுக்காற்றில் பறந்து காட்டு மரத்தடியில் ஒரு சோற்றுப்பார்சலை அவிழ்த்து உண்ட ஒரு வாழ்க்கையின் அத்தியாயம் உண்டு.அதனால் நானும் அமேசானின் பிள்ளைதான்.பால்ய பருவத்தில் இருந்தே உனக்கு காடுகளோடு பேசும் வருத்தம் உண்டா என்று நீங்கள் கேட்டால் கொஞ்சம் அந்த வியாதி இருக்கத்தான் செய்தது என்பேன்.எங்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு காடு இருந்தது.தூக்கணாங்குருவிக்கூடு வெளவால் மரங்கள்.சில் வண்டு ஓசைகள் சிறு ஓடையில் நீர் சலசலப்பது.சம்புக்காய்கள் காய்ந்து வெடித்துப்பறப்பது.அதை துரத்திப்பிடிப்பது.இதுதான் எனது காடாக இருந்தது.அங்கு காட்டுப்பூனைதான் காட்டுக்கு ராசா என்றால் பாருங்களே அந்தக்காட்டைபற்றி.
ஒரு சுற்றுலா வழிகாட்டியைபோல நான் என் பயணத்தை பெருமை அடிக்கப்போவதில்லை.அமேசனின் இந்த குழந்தையை ஈன்றெடுக்க தவிப்பதற்கு காரணம் ஒரு கந்தர்வப் புன்னகையான என் நிலத்தின் கதைகளும் அதில் உண்டு.போரால் அதிக முறை அகதி வாழ்க்கை. ஊரை இழந்து ஓரிரவில் நெடுந்தூரம் திக்குத் தெரியாமல் காட்டுத்தெருக்களிலும் நடந்து ஒரு வாழ்க்கை நிர்ப்பந்தமானாலும்.துயரானாலும் ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சியும் என்னோடு தொற்றிக்கொண்டது. அதற்கு காரணம் நான் அமேசானின் மகனாகவும் என்னை தத்துக்கொடுத்ததுதான்.
வடகாட்டுக்கும் மாங்குளத்துக்கும் .வடகாட்டுக்கும் மல்லாவிக்கும் என நான் சில காலங்கள் உலவிக்கொண்டிருந்தேன்.இரவில் சில்லென்றிருக்கும் காட்டின் பனிக்குளிர்.அந்தி வேளைகளில் யானைகளை தெருவோரத்தில் குந்தியிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன் அச்சத்துடனும்.முதலைகள் பற்றிய பொல்லாத கதைகளை ஏதோ மறந்து விட்டு காட்டினிடை இருக்கும் குளத்தில் நீச்சலடித்தேன்.ஒரே ஒரு சிறிய பிள்ளையார் கோவில். யாரும் அவரை தொட்டு கற்பூரம் கொழுத்தி ஒரு பூவை போட்டு வணங்கலாம் என்ற பறவைகளினால் எழுதப்பட்ட சரத்து.காட்டு நிலத்தோடு வயல்களுக்கு நடுவில் யானைக்கு அடிக்கும் மணி கட்டிய முற்றத்தில் ஒரு திணைபுலம் காக்கும் சங்க கால இலக்கியத்தில் தோன்றுவதுபோல ஒரு அழகி.அவளிலும் போய் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கும் என் இதயம் என இந்த அமேசானின் மைந்தன் அழகாயும் அகதியாயும் இருந்தேன்.அகதி வஸ்த்திரம் எனக்கு பண்டாரவன்னியரும் குருவிச்சி நாச்சியும் தாமுலவிய வீதிகளை படிக்கத்தந்த புத்தகம்போல இருந்தது.வடகாட்டு வேட்டைகாரர்களின் இறைச்சியும் அந்த வயல்களின் விளைந்த அரிசியின் சோறும் என்னை அங்கேயே வாழ்ந்துவிடச்சொன்னது.
ஆனால் காலம் வடகாட்டில் இருந்து அம்பலப்பெருமாள் அக்கராயன் ஜெயபுரம்வரை கூட்டிச்சென்றது.எங்கும் என்னை அமேசனின் மைந்தனாகவே இருக்கவைத்தது.சில வேளை நண்பர்களோடு வயல்தெருக்களில் நஞ்சுண்ட காடுவரை போய் பதநீர்(கள் அருந்திவிட்டு)வயலுக்கு பாயும் நீர் வாய்க்காலில் குப்புறப்படுத்து அப்படியே வெறியில் புரண்டெழுந்தெழுந்த மீண்டும் அக்கராயன் வர அறநெறிக்கால பாசுர நாயனார்களாக பக்குவமாய் ஆகிவிடுவோம்.அடிக்கடி சில பொழுதுகளில் கோட்டை கட்டிக்கும் அக்கராயனுக்கும் காட்டுவழிப்பயணம்.கோட்டைகட்டிய குள அணை. அதற்கு அப்பால் விரியும் பரந்த பெரிய கானகம்.இன்னொரு பக்கம் வயல்கள்.ஆடு மாடு மந்தைகள் பெரிய மாட்டுப்பட்டிகள் எருமைக்கடாக்கூட்டங்கள் என அந்த நிலத்தின் அழகில் மயங்கினேன்.அமேசனை பச்சை குத்தினேன் என் இதயத்தில். அகதி வாழ்க்கை இனிப்பாய் இருந்ததோடு மட்டும் நிற்கவில்லை.எனக்கு ஒரு வித இறுமாப்பையும் தந்தது.அது என்னவெனில் எனது தாய் நிலம் தமிழ் நிலத்தின் அழகு ஊர்களின் அழகு மனிதர்களின் பண்பாடு வண்ணங்கள் செவிவழிக்கதைகள்.தாம் வந்த கதைகள் எல்லாவற்றையும் பார்க்க அனுபவிக்க பேறுபேற்றேன்.நான் அகதியாகா விட்டால் நான் அமேசனின் மைந்தனாகி ஈழத்தை பெருமை கொண்டிருக்கமுடியாது.
அம்பலபெருமாள் கோட்டைகட்டி நிலத்தில் எங்கள் மூதாதைகள் கோட்டை கட்டி இராச்சியம் கண்டனர் என்பது வரலாறாக இருக்கும்போது.எப்படி அங்கிருந்து புறப்பட எனக்கு மனம் வரும்.அடிக்கடி கொஞ்சக்காலம் அதையே சுற்றி வந்தேன் பண்டாரவன்னியனின் பேரனைப்போல.ஆனால் என் நண்பன் சசிக்கு அந்த முல்லையும் மருதமுமான நிலத்தில் காதல் செய்யவும் ஆங்கோர் தினைபுலத்தில் தனித்திருந்த களிக்கவும்.மடல்கள் வரையவும் வரமாயிற்று அன்றே.மருதமும் முல்லையுமான நிலத்துக்கும் சசிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்புபோல.
மருத நிலமான கிளிநாச்சியில் குளத்தை அண்டிய சிறுகாடுகளும் வயல்களும் சிறு குறிஞ்சியாய் காட்சி தந்த ஐந்தடிவான் மண் மேட்டிலுமான சூழலில் அவனின் குழந்தைப்பருவங்கள் தொடங்கியது.ஆனாலும் வறுமையும் வாழ்க்கையோடு கூட வந்தது அவனுக்கு.அவன் வாழ்ந்த ஐந்தடிவானை கடந்து நான் எனது பாலர் காலத்து நண்பர்களோடு பள்ளிக்குப்போன போதும் அவன் என் நண்பனாகவில்லை.அவன் அப்போது என்ன செய்து கொண்டிருந்தான்.அவனை படிக்கச்சொல்லும் சூழல் அங்கே இல்லை.ஒரு பக்கத்தில் குளம் .குளம் காலமெல்லாம் யப்பானையும் கொழுத்த விரால்களையும் தரும் என்றிருக்கும்.மறுப்பக்கம் வயல்கள்.அவை காலமெல்லாம் சூடடிக்கும் காலத்தில் நெல்லுப்பருக்கைகளை தரும் என்ற நம்பிக்கையை தந்திருக்கும் அவனுக்கு.வைரவர் கோவிலின் மணி காலையும் மாலையும் வெள்ளியும் அமுதையும் வடைகளையும் மோதகங்களையும் தரும் என்று சசிக்கு அச்சிறிய வயதில் நம்பிக்கைகளாய் இருந்திருக்கும்.அதனாலும் எங்களோடு ஒருவனாய் பாலரில் கைகோர்க்க முடியாதிருந்திருக்கலாம்.அவனிடம் இதை நான் கேட்டதுமில்லை.ஆனால் ஒரு பொழுது நண்பனான். எனக்கு சசி என்ற ஒரு அற்புதமான நண்பனை சந்திக்க பிறந்து பதினாறு பதினேழு ஆண்டுகளை கடக்க வேண்டியிருந்தது.அப்போது மொத்த அன்பையும் கொட்டிக்கொடுத்தான் எனக்கு.எனது தாயாருக்கும் மிகவும் பிடித்த பிள்ளையாயும் இருந்தான்.சசி எனக்கு நண்பனானபோது மருத நிலத்தின் இளவரசன் காட்டுநிலத்தின் பூக்களை புன்னகையாய் அணிந்தவனாய் இருந்தான்.அப்பொழுதுதான் தான் எப்படிப்படித்தேன் என்ற கதையை சொன்னான்.சசி நன்றாக பாணுக்கு மா குளைப்பான்.பிறகு பாண்களை சுமந்து சென்று கடைகடையாய் போடுவான்.அதில் கிடைக்கும் பணத்தையும் கொண்டு தன் பள்ளிக்கான படிப்புக்குமாய் ஒரு பாதையை அவன் அச்சிறுவயதில் அமைத்தான்.சசிக்கு குளத்தில் தூண்டில் போடத்தெரியும்.தூண்டிலில் மீன் சிக்கும்வரை காத்திருக்கும் பொறுமை தெரியும்.இந்தப்பொழுதுகளில் அவனை ஒரு பள்ளியின் அதிபராக இந்த முல்லைநிலமும் மருத நிலமும் அறியும்.அமேசனின் மைந்தன் சசி எந்தப்பள்ளிக்கு அதிபர் என்பதை அறிய என்னோடு காட்டு வழி நடக்கவேண்டும் நீங்கள்.
அதற்கு முன்னதான ஒரு பொழுதில் முள்ளியவளையில் இருந்து கேப்பாபிலவு வழியாக புதுக்குடியிருப்புக்கு அடிக்கடி ஈருருளியில் போகும் வாழ்க்கை கிடைத்தது.அதுவும் ஒரு அழகிய காட்டுவழி.வயல்கள் காடுகள் எருமைகள் என ஒரு கொஞ்ச நேரத்தில் சொர்க்கத்தை அனுபவித்துவிடலாம்.அதுவும் மாலைவேளைகள் மனதுக்கு இரம்மியமாய் இருக்கும்.ஒரு எருமையாய் பிறந்திருக்கலாம் என்பதுபோலவும் அந்த அழகிய காட்டு இயற்கை எண்ணவைக்கும்.ஏன் இப்ப மட்டும் எருமை இல்லையா நீ என்று உங்கள் கிரந்தங்களை அவசரமாய் கடந்து மீண்டும் அம்பலபெருமாளில் நுழைகின்றேன்.அமேசனின் புதிர்போல எங்கள் ஈழ நிலத்திலும் ஆச்சரியங்கள் வாழ்க்கைகளும் உண்டு.
கோட்டைகட்டிக்குப் போகின்ற வழியில் காட்டுக்குள் ஒரு கிராமம் உண்டு.நீங்கள் நினைப்பது போல தெருவில் நின்றெல்லாம் காணமுடியாது.யானைகள் இருக்குமோ என்று படபடக்க உள்ளே இன்னும் உள்ளே இன்னும் உள்ளே காட்டுக்குள் போனால் அந்தக்கிராமம்.அமேசனின் அதிசயங்களாய் மனிதர்கள்.அங்கே விரல் விட்டு எண்ணக்கூடிய பிள்ளைகள் சில ஆசிரியர்கள்.அந்தப்பள்ளிக்கு அதிபர் என் நண்பர் சங்கரபாண்டி சசிகுமார்.
அண்மையில் வடக்கு கல்வி
வீழ்ச்சி என்றெல்லாம் புலம்பல்களை அதிகம் கேட்டபோது எனக்கு மனதில் தோன்றியது காட்டுக்குள் இருக்கும் அந்தப்பள்ளியும் அந்தப்பிள்ளைகளும் சசியும்தான்.அங்கே ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கின்றது.உங்களில் பலர் அறியாத அந்தக்காட்டுப்பள்ளியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சவால் விட்டு சிறந்த அடைவை பெற்றுள்ளார்கள்.வடக்கில் கல்விப்புரட்சி இப்படி அமேசனின் பிள்ளைகளிடமிருந்து தொடங்கவேண்டுமென்று நினைக்கின்றேன்.நான் அந்தக்காட்டிடை அக்கினிக்குஞ்சொன்றை கண்டேன்.
வீழ்ச்சி என்றெல்லாம் புலம்பல்களை அதிகம் கேட்டபோது எனக்கு மனதில் தோன்றியது காட்டுக்குள் இருக்கும் அந்தப்பள்ளியும் அந்தப்பிள்ளைகளும் சசியும்தான்.அங்கே ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கின்றது.உங்களில் பலர் அறியாத அந்தக்காட்டுப்பள்ளியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சவால் விட்டு சிறந்த அடைவை பெற்றுள்ளார்கள்.வடக்கில் கல்விப்புரட்சி இப்படி அமேசனின் பிள்ளைகளிடமிருந்து தொடங்கவேண்டுமென்று நினைக்கின்றேன்.நான் அந்தக்காட்டிடை அக்கினிக்குஞ்சொன்றை கண்டேன்.
சசி!
என் பட்டணத்து புளுக்கம் உன் காட்டுப்பிள்ளைகளின் சாதனைகளால் என் மேல் குளிர்ந்த மழையாய் பெய்யும் என்ற பெருநம்பிக்கையெனக்குண்டு.உருவாகத்தெரிந்த உனக்கு உருவாக்கவும் தெரியும்.விருட்சங்கள் தோன்றட்டும் இன்னும்!
என் பட்டணத்து புளுக்கம் உன் காட்டுப்பிள்ளைகளின் சாதனைகளால் என் மேல் குளிர்ந்த மழையாய் பெய்யும் என்ற பெருநம்பிக்கையெனக்குண்டு.உருவாகத்தெரிந்த உனக்கு உருவாக்கவும் தெரியும்.விருட்சங்கள் தோன்றட்டும் இன்னும்!
காட்டுக்குள் நுழைந்தால் காடு மாறுவதும் வழமையும் ஒரு காடு மாறியாய் கடக்கின்றேன் இப்போது.
.....இல்லை இப்போது நான் மான்களை வேட்டையாடுவதில்லை

No comments:
Post a Comment