கொட்டும் மழையில்
கூரையின் ஓசையில்
போர்வையின் கதகதப்பில்
எப்போதும்
ஒரு தூக்கம் விரும்புமெனக்கு
ஓர் நாள்
தாழ்வாரம் இல்லாத
மழை இரவு வந்தது
கூரையின் ஓசையில்
போர்வையின் கதகதப்பில்
எப்போதும்
ஒரு தூக்கம் விரும்புமெனக்கு
ஓர் நாள்
தாழ்வாரம் இல்லாத
மழை இரவு வந்தது
குடைகள் சாத்தி வைக்கும்
சுவர்கள் இல்லை
மழையை இரசிக்க சாளரம்
ஈசல்கள் மொய்க்க
ஒரு கைவிளக்கில்லை
சூடான தேனீர் வைக்க
ஒரு அடுப்பில்லை
தீக்குச்சி கூட இல்லை
எதுவுமில்லை
மழை வந்தது
சுவர்கள் இல்லை
மழையை இரசிக்க சாளரம்
ஈசல்கள் மொய்க்க
ஒரு கைவிளக்கில்லை
சூடான தேனீர் வைக்க
ஒரு அடுப்பில்லை
தீக்குச்சி கூட இல்லை
எதுவுமில்லை
மழை வந்தது
கிணற்றுக்குள் தவளைகளுக்கு மேல்
குளத்தின் மீன்களுக்கு மேல்
வானத்தில் பறவைகளுக்கு மேல்
பெருவெளியில்
முட்கள் புற்களுக்கு மேல்
யுகம் யுகமாய் பெய்து
மழைக்கு பழக்கமுண்டு
குளத்தின் மீன்களுக்கு மேல்
வானத்தில் பறவைகளுக்கு மேல்
பெருவெளியில்
முட்கள் புற்களுக்கு மேல்
யுகம் யுகமாய் பெய்து
மழைக்கு பழக்கமுண்டு
மழை பெய்தால்
புற்கள் துளிர்க்கும்
ஓடைகள் பிரவாகிக்கும்
கிளைகளில் பூக்கள் முகிழ்க்கும்
குளங்கள் வழியும்
எல்லாமே பச்சையாவிடும்
காற்று குளிர்மையாகிவிடும்
எங்கும் புன்னகை
மழையின்
நெடுங்கால நம்பிக்கை
புற்கள் துளிர்க்கும்
ஓடைகள் பிரவாகிக்கும்
கிளைகளில் பூக்கள் முகிழ்க்கும்
குளங்கள் வழியும்
எல்லாமே பச்சையாவிடும்
காற்று குளிர்மையாகிவிடும்
எங்கும் புன்னகை
மழையின்
நெடுங்கால நம்பிக்கை
முதன் முதலாய்
பதுங்குகுழிக்குள் வெள்ளம்
உதடுவரை முட்டிவிட
விறைத்திருக்கும்
ஐடமாகிய என் மேல்
கொட்டும் அனுபவம் மழைக்கு
கடதாசி கப்பல் மழலைகள்
வலைஞர் மடத்தில்
தெப்பமாய் மிதக்கையில்
கார்காலத்தின்
மப்பும் மந்தாரத்தின்மேல்
சாபமாயிரம்
இனி மண்வாசம் தின்று
பாவமாய்
தூறுமென்பதையறியா மழை
பதுங்குகுழிக்குள் வெள்ளம்
உதடுவரை முட்டிவிட
விறைத்திருக்கும்
ஐடமாகிய என் மேல்
கொட்டும் அனுபவம் மழைக்கு
கடதாசி கப்பல் மழலைகள்
வலைஞர் மடத்தில்
தெப்பமாய் மிதக்கையில்
கார்காலத்தின்
மப்பும் மந்தாரத்தின்மேல்
சாபமாயிரம்
இனி மண்வாசம் தின்று
பாவமாய்
தூறுமென்பதையறியா மழை
மழை கொட்டியது
பீரங்கி வாயின்
கொலை முழக்கத்தில்
மழையில்
நட்சத்திரங்கள் கரைந்தன
தாழ்வாரத்தில்
தூவானம் இரசித்த மாயவிழிகள்
இரட்டை வாய்க்காலில்
இறுக மூடிக்கொண்டன
அந்த மழைக்கு
எதுவும் முளைக்கவில்லை
எதுவும் துளிர்க்கவில்லை
பீரங்கி வாயின்
கொலை முழக்கத்தில்
மழையில்
நட்சத்திரங்கள் கரைந்தன
தாழ்வாரத்தில்
தூவானம் இரசித்த மாயவிழிகள்
இரட்டை வாய்க்காலில்
இறுக மூடிக்கொண்டன
அந்த மழைக்கு
எதுவும் முளைக்கவில்லை
எதுவும் துளிர்க்கவில்லை
மழைக்குத் தெரியுமா
இன்று மாலை பெய்த மழையை
நான் இரசிக்கவில்லை
இன்று மாலை பெய்த மழையை
நான் இரசிக்கவில்லை

No comments:
Post a Comment