Wednesday, April 15, 2020

யப்பான் சாமான்-பொன்.காந்தன்,


யப்பான் இங்கிலாந்து
யமகா கொண்டாவென்று
அப்பாலிருந்து வந்த
ஆணி நட்டுவரை
பொத்தான் பூட்டு ஈறாய்
சுற்றிச் சுழற்றி பார்த்து
சுண்டிச் சுரண்டி தடவி
வெண்டிக்காய் முறித்து
வேண்டும் பழக்கமதாய்
சிக்மா ரொபின் என்றும்
சிங்கர் சொனி என்றும்
முக்கால் வாசி வீட்டுள்
வேறங்கோவிருந்து
விளைந்த வந்தவைகள்
அச்சு அசல் என்று
ஆட்டி திறந்து காட்டி
சொட்டு பெற்றோல் காட்டி
சுழற்றி முறுக்கி எடுத்து
விக்கல் விம்மலின்றி
விறுகென்று எடுத்தோடி
முக்கல் ஒன்றுமின்றி
முன்னால் வந்து நிறுத்தி
யப்பான் சாமான் என்று
சட்டை இழுத்துக் குலுக்கி
பட்டை கழராமல்
பார் இருபது வரிசங்கள்
மெக்கானிக் பக்கமின்றி
மேனி வெளிறாமல்
உக்கல் உடைசலின்றி
அப்படியே அழகாய்
கட்டுக்குலையாமலிவள்
கொட்டித்தருகிறாளென்று
செட்டுவிட்டு செருமி
ஒரு நடை நடைந்து
ஒரு பொட்டு டப்பாவென்றாலும்
பூர்வீகமெல்லாம் கேட்டு
மூலை விளிம்பு மூடி
பாரம் பக்கமெல்லாம் பார்த்து
தாரத்திடமும் காட்டி
தன்னை கொஞ்சம் உயர்த்தி
பேனா பென்சில் வரையும்
பெரிசாய் யோசிச்சு
கரிசனையோடலையும் கதையில்
வரிசையாய் வந்து
வறுக்கும் சட்டி முறுக்கும் ஸ்கூட்டி
நறுக்கும் கத்தி நக்கும் செல்பேசி
குறுக்கு மறுக்கும் எங்கும் பார்த்தாலும்
விறுவிறுக்குவென்று வந்ததை
ஒருக்காலுரைக்காதபடி
வாய் மூக்குக்கு ஒரே கட்டு
கொரோனாவும் வந்திடுமோ
அடிக்குது நெஞ்சு பட்டு பட்டு..

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...