பகல் பறைமேளச்சத்தம்
சில வெடிச்சத்தங்கள்
பிரேதம் ஒன்று போய்க்கொண்டிருந்தது
அறைக்குப்பின்னாடி
குப்பைக்குள் புகுந்த
பாம்புக்காய் நாய் விடாமல்
நீண்ட நேரமாய் குரைத்தது
நான்கே முக்காலுக்கு
வழமை போல
அருகிலுள்ள கோவிலின் ஆயத்தமணி
புலுனிகள் பூவரசில்
கலகலத்தன
பாண்பெட்டி ஆட்டோ
ஐந்து மணிக்கு அதே பாடலுடன்
சில வெடிச்சத்தங்கள்
பிரேதம் ஒன்று போய்க்கொண்டிருந்தது
அறைக்குப்பின்னாடி
குப்பைக்குள் புகுந்த
பாம்புக்காய் நாய் விடாமல்
நீண்ட நேரமாய் குரைத்தது
நான்கே முக்காலுக்கு
வழமை போல
அருகிலுள்ள கோவிலின் ஆயத்தமணி
புலுனிகள் பூவரசில்
கலகலத்தன
பாண்பெட்டி ஆட்டோ
ஐந்து மணிக்கு அதே பாடலுடன்
இரவு
அயல்வீட்டு தொட்டி நிரம்பும் சத்தம்
தூரத்தே
விட்டு விட்டு கேட்கும் மந்திரம்
சில்வண்டுகளின் ஓசை
தொலைபேசியில்
பக்கத்து வீட்டில் உரத்த பதில்கள்
எனது வைபருக்கு
ஒரு அழைப்பு வந்து தவறவிடப்பட்டது
எலிகள் முகடுகளுக்கால் ஓடின
பல்லி சொல்லும் சத்தம்
மிக கணீரென்று அறையை நிரப்புகிறது
அயல்வீட்டு தொட்டி நிரம்பும் சத்தம்
தூரத்தே
விட்டு விட்டு கேட்கும் மந்திரம்
சில்வண்டுகளின் ஓசை
தொலைபேசியில்
பக்கத்து வீட்டில் உரத்த பதில்கள்
எனது வைபருக்கு
ஒரு அழைப்பு வந்து தவறவிடப்பட்டது
எலிகள் முகடுகளுக்கால் ஓடின
பல்லி சொல்லும் சத்தம்
மிக கணீரென்று அறையை நிரப்புகிறது
எல்லாமே இயல்பாக இருக்கிறது
தொலைவிலும்
எந்தக் குண்டு ஓசையும் இல்லை
நாய்கள்
நாய்களை பார்த்தே குரைக்கின்றன
எல்லாம் இயல்பாய் இருக்கிறது
என்னை தவிர
இந்த இரவில் நிச்சயம் நான்
ஒரு சில்வண்டாயோ
ஒரு மின்மினியாகவோ
பல்லியாக எலிகளாக
மாவில் தொங்கும் வெளவாலாக
அன்றி ஒரு
நிலவை இரசித்தெழுதிய
காதல் கவிதையாக இருந்திருக்க வேண்டும்
தொலைவிலும்
எந்தக் குண்டு ஓசையும் இல்லை
நாய்கள்
நாய்களை பார்த்தே குரைக்கின்றன
எல்லாம் இயல்பாய் இருக்கிறது
என்னை தவிர
இந்த இரவில் நிச்சயம் நான்
ஒரு சில்வண்டாயோ
ஒரு மின்மினியாகவோ
பல்லியாக எலிகளாக
மாவில் தொங்கும் வெளவாலாக
அன்றி ஒரு
நிலவை இரசித்தெழுதிய
காதல் கவிதையாக இருந்திருக்க வேண்டும்
எங்கோ வீசப்படும் குண்டுகள்
இடிபாடுகள்
ஒடுங்கிய பாதையில்
நிரம்பிவழியும் அகதிகள்
உயிரை காக்க ஓடும்
வெளிறிய முகங்கள்
என்னை பிடித்திழுக்கின்றன
அழ வைக்கப் பார்க்கின்றன
கோபமூட்டுகின்றன
நினைவுகளுக்குள் உதைக்கின்றன
எங்கோ
பதுங்கு குழிக்குள் இருந்து
யாரோ என்னோடு
உரையாட பார்க்கின்றார்கள்
இரட்டை வாய்காலுக்கா
வலைஞர் மடத்துக்கா என
தடுமாற வைக்க நினைக்கின்றன
இடிபாடுகள்
ஒடுங்கிய பாதையில்
நிரம்பிவழியும் அகதிகள்
உயிரை காக்க ஓடும்
வெளிறிய முகங்கள்
என்னை பிடித்திழுக்கின்றன
அழ வைக்கப் பார்க்கின்றன
கோபமூட்டுகின்றன
நினைவுகளுக்குள் உதைக்கின்றன
எங்கோ
பதுங்கு குழிக்குள் இருந்து
யாரோ என்னோடு
உரையாட பார்க்கின்றார்கள்
இரட்டை வாய்காலுக்கா
வலைஞர் மடத்துக்கா என
தடுமாற வைக்க நினைக்கின்றன
போரின் எச்சத்துக்குள்
நடக்கும் போருக்குள்
மின்மினிகள்
அகதிகளாக இருக்கின்றன
பல்லிகள்
மொழியை இழந்த ஏதிலிகள்
புலினிகள்
நந்திக்கடலின் ஓரத்தில்
குரலை தொலைத்துவிட்டன
பூவரசுகளின் பூக்கள்
இன்னமும் மஞ்சளாகவில்லை
நடக்கும் போருக்குள்
மின்மினிகள்
அகதிகளாக இருக்கின்றன
பல்லிகள்
மொழியை இழந்த ஏதிலிகள்
புலினிகள்
நந்திக்கடலின் ஓரத்தில்
குரலை தொலைத்துவிட்டன
பூவரசுகளின் பூக்கள்
இன்னமும் மஞ்சளாகவில்லை

No comments:
Post a Comment