பிரியமாயிருந்தோம் தேவதைகள் மீது
பிரிவில்லையென்றும் நினைத்தோம்
பிரிக்க முடியாதென்றும் கனவுடனிருந்தோம்
பிரிவு நிகழ்ந்தது
எங்கள் தெருக்களில்
பசிய மஞ்சளாகி உதிர்ந்ததாயில்லையது
பிரிவில்லையென்றும் நினைத்தோம்
பிரிக்க முடியாதென்றும் கனவுடனிருந்தோம்
பிரிவு நிகழ்ந்தது
எங்கள் தெருக்களில்
பசிய மஞ்சளாகி உதிர்ந்ததாயில்லையது
போரின் கடைசி வேட்டுக்கள் கேட்டன
ஓவென்று அழைத்தோம்
ஆகக்கடைசி வேட்டும் தீர்ந்தது
பிரியமான அழைப்புக்கள்
முடிவற்றதாய் போய்த் தொலைந்தது
இதயத்தில் கிடந்த அம்முக்குட்டிகள்
போக்கிடமின்றி
ஒரு சபதத்தின் சுலோகம் ஆகியது
ஓவென்று அழைத்தோம்
ஆகக்கடைசி வேட்டும் தீர்ந்தது
பிரியமான அழைப்புக்கள்
முடிவற்றதாய் போய்த் தொலைந்தது
இதயத்தில் கிடந்த அம்முக்குட்டிகள்
போக்கிடமின்றி
ஒரு சபதத்தின் சுலோகம் ஆகியது
எமது தவிப்பை
இன்னமும் சொல்லி முடிக்கவில்லை
பிரிவுகளை இன்னமும் நம்பமுடியவில்லை
குரூருமான பறிப்புக்களை
நினைக்காமல் இருக்கமுடியவில்லை
பிரிவை எழுதியவர்கள்
இன்னமும் உலவுவதை சகிக்கமுடியவில்லை
ஒரு பருக்கையும் கொட்டுண்டாதபடி
இப்போது பொத்தி வைத்திருக்கிறோம்
மன்னிக்கப்போவதில்லையெனும் வார்த்தையை
இன்னமும் சொல்லி முடிக்கவில்லை
பிரிவுகளை இன்னமும் நம்பமுடியவில்லை
குரூருமான பறிப்புக்களை
நினைக்காமல் இருக்கமுடியவில்லை
பிரிவை எழுதியவர்கள்
இன்னமும் உலவுவதை சகிக்கமுடியவில்லை
ஒரு பருக்கையும் கொட்டுண்டாதபடி
இப்போது பொத்தி வைத்திருக்கிறோம்
மன்னிக்கப்போவதில்லையெனும் வார்த்தையை
நாம் காத்திருக்கிறோம்
தேவதைகளுக்காக காத்திருக்கும்
இனிய கவிதைகள் இல்லை
இனி மகிழ்ந்திருப்போம்
யோனிகளை பிளந்த வக்கிரத்தில் சூடிய
பதக்கங்கள் உதிரத் தடுமாறும்
முகத்தை ரசித்திருப்போம்
தேவதைகளின் மன்றாட்டத்தில்
மகிழ்ந்த விழிகளில்
பூளை சாறிய மிருகத்தின் கலக்கத்தை
பார்க்க ஆவலாய் இருக்கிறோம்
தேவதைகளுக்காக காத்திருக்கும்
இனிய கவிதைகள் இல்லை
இனி மகிழ்ந்திருப்போம்
யோனிகளை பிளந்த வக்கிரத்தில் சூடிய
பதக்கங்கள் உதிரத் தடுமாறும்
முகத்தை ரசித்திருப்போம்
தேவதைகளின் மன்றாட்டத்தில்
மகிழ்ந்த விழிகளில்
பூளை சாறிய மிருகத்தின் கலக்கத்தை
பார்க்க ஆவலாய் இருக்கிறோம்

No comments:
Post a Comment