இப்போது ஏதேன் தோட்டத்தின் எல்லாக்கனிகளும்
அச்சப்படும்படும் படியாய்
ஏதோ காரணத்தின் காம்பில் தொங்குகின்றன
என் செய்குவை ஏவாள்
அச்சப்படும்படும் படியாய்
ஏதோ காரணத்தின் காம்பில் தொங்குகின்றன
என் செய்குவை ஏவாள்
முத்தமும் ஒரு நோயெனவாய்
படைக்கப்பட்டாயிற்று பூமி
யார் வாழ்தற்கோ தயாராகிறது
நதிகளுக்கும் மலைகளுக்கும்
வானுக்குமிடையில்
ஆதாமின் நிர்வாணத்தை மறைக்க
ஏதுமில்லை ஏற்பாட்டில்
சடாமுடியுடன்
எவரும் தோன்றுதற்கற்ற
திருவாசங்கள் தொலைந்த
புதைமேட்டில்
ஒரு நடனத்தை ஆடச்
சதங்கையும் தொலையும் ஜதி
படைக்கப்பட்டாயிற்று பூமி
யார் வாழ்தற்கோ தயாராகிறது
நதிகளுக்கும் மலைகளுக்கும்
வானுக்குமிடையில்
ஆதாமின் நிர்வாணத்தை மறைக்க
ஏதுமில்லை ஏற்பாட்டில்
சடாமுடியுடன்
எவரும் தோன்றுதற்கற்ற
திருவாசங்கள் தொலைந்த
புதைமேட்டில்
ஒரு நடனத்தை ஆடச்
சதங்கையும் தொலையும் ஜதி
ஏவாளிடம் கேட்டதற்கு
இன்னமும் பதிலில்லை
பெரு மெளனம் தொடர்கிறது
யார்மீதோ
அவள் பழியத்தனையையும்
சுமத்தப்போகிறாள்
ஏதேனின் தோட்டத்தில்
ஓடி மறைய நினைக்கிறேன்
இன்னமும் பதிலில்லை
பெரு மெளனம் தொடர்கிறது
யார்மீதோ
அவள் பழியத்தனையையும்
சுமத்தப்போகிறாள்
ஏதேனின் தோட்டத்தில்
ஓடி மறைய நினைக்கிறேன்
புசித்தவைகள் பூசிய நடனத்தை
புதிய ஏற்பாட்டின்
தொடக்கத்தில் ஆடுகவெனும்
கட்டளையொடு
ஆட்டுவிப்பவர் பெருங்குரல்
ஏவாளின் முன்
சவுக்குகளின்
மொத்தமூர்க்கமும் ஏந்தியதோர்
கடைசித்தண்டனையில்
எவ்வாறு தோன்றுவேன்
புதிய ஏற்பாட்டின்
தொடக்கத்தில் ஆடுகவெனும்
கட்டளையொடு
ஆட்டுவிப்பவர் பெருங்குரல்
ஏவாளின் முன்
சவுக்குகளின்
மொத்தமூர்க்கமும் ஏந்தியதோர்
கடைசித்தண்டனையில்
எவ்வாறு தோன்றுவேன்
ஏவாளை
மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்
யாதேனும்
மன்னிக்கும்படியான
ஆதிவாசகங்கள்
நினைவுக்கு வந்திடக் கூடுமோ
மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்
யாதேனும்
மன்னிக்கும்படியான
ஆதிவாசகங்கள்
நினைவுக்கு வந்திடக் கூடுமோ
மண்ணில் புரண்டெழுந்து
ஓர் மாதவத்தை ஒத்த
கண்ணில் நீரொழுகி
அத்தனையும் கரைந்துவற்றி
விண்ணில் தோன்றும்
உடுக்கள் நட்சத்திரங்கள்
மழை முகில் சாட்சியாய்
ஒரு புல்லின் நுனிக்கு அடிமையாகி
பாடிபரவி
வில்லில் ஏற்றிய பாணம்
கோபமனைத்தும் களைந்து
சொல்லில் சாந்தமுடன்
சுடருடன்
பிறவியை பூமியை ஆராதிக்க
ஒரே ஒருமுறையெனும்
மன்றாட்டத்தை ஒப்புவிக்க
ஒத்திகை பார்த்து தோன்றிடின்
ஓர் மாதவத்தை ஒத்த
கண்ணில் நீரொழுகி
அத்தனையும் கரைந்துவற்றி
விண்ணில் தோன்றும்
உடுக்கள் நட்சத்திரங்கள்
மழை முகில் சாட்சியாய்
ஒரு புல்லின் நுனிக்கு அடிமையாகி
பாடிபரவி
வில்லில் ஏற்றிய பாணம்
கோபமனைத்தும் களைந்து
சொல்லில் சாந்தமுடன்
சுடருடன்
பிறவியை பூமியை ஆராதிக்க
ஒரே ஒருமுறையெனும்
மன்றாட்டத்தை ஒப்புவிக்க
ஒத்திகை பார்த்து தோன்றிடின்
ஏவாள் ஏதுரைப்பாள்
இனியும் நம்பமுடியாதென்பாளா
இனியும் நம்பமுடியாதென்பாளா

No comments:
Post a Comment