குறையிலொரு கோவாத்துண்டு
குளிர் விறைப்பில்
கோழிக்காலும்
மறந்து துருவிய தேங்காய் பாதி
மலிவில் வாங்கிய
மீன்களில் மிச்சம்
கறுத்துப் போன கத்தரிகாய்கள்
கடித்து வைத்த
சொக்கிலேட் பீஸ்கள்
பச்சை மிளகாய் பத்திருபது
பால் பிளிஞ்சு மிச்ச சொச்சம்
பம்பாய் வெங்காயம்
விழுப்புண்ணடைந்து
குறண்டியபடி பயித்தங்காய்
கொளுத்தரண்டுருழைக் கிழங்கு
முதுகு முறிந்து முருங்கை காய்
முக்கித் தவிக்கும்
பூசணி பாதி
சித்திரவதையில் ஆப்பிள் ஒறேஞ்
சிலையாய்போன கீரைப்பிடி
கல்லாய் சபிஞ்ச
கரட் பீற்றூட்
மேல் பார்க்க முட்டை மூன்று
கீழ்ப்பக்கமும்
கிடக்கும் ஏதோ
இடைக்குள்ளும் இனிப்பாயொன்று
அடைத்து வைக்கும்
அறையை திறந்தால்
அடடா இன்று ஒன்றுமில்லை
குளிர்ப்பதனில்
கொரோனா வருமாம்
கொதிக்க வைக்கத்
தொடங்கி விட்டார்
குசினிக்குள்ளே சுடு தண்ணியை
கூசாவையும் தேடுகின்றார்
மாஸா பீசா மிக்ஸ் புரூட்
கோலா கூலா கொக்கென்று
ஆலாய் பறந்த கூட்டத்தை
அடக்கி வைத்துப் பாடங்கள்
படிப்பித்தது கொரானாவின்று
முடக்கொத்தான் மறந்துவிட்டு
மூடிச் சூப் குடித்தவர்கள்
கொடியினில் தூங்குகின்ற
குருவித்தலை பாவக்காயை
அடிவளவில் பிடுங்கி வந்து
கறிவைக்க கண்டேனின்று
மடிநிறைய முந்தியம்மா
மருத்துவமும் என்றுரைத்து
பிடுங்கி வந்து பிணி தீர்க்க
பேசிபேசி தின்னத்தரும்
வதக்குகின்ற வட்டுக்கத்தரி
வந்ததன்றோ நினைவிலின்று
வாசலிலே பிலாக்காயில்
ஒரு பிரட்டல் கறியின்று
வாழைப்பூ வறையோடு
வல்லாரைச் சம்பலொன்று
ஊறுகாய்த் துண்டுடன்
ஒரு நல்ல அகத்திச் சொதி
இரவுக்கு குறிஞ்சாப்பிட்டு
இடைநேரம் புளுக்கொடியில்
இதுக்கு முதல் சமைக்கும்போது
எங்கயோ ஒருவாறு
உக்குவதாய் கிடந்த பழைய
சத்தகத்தை தேடி எடுத்து
கொக்கையொன்றை கட்டி கிளப்பி
கிழக்கும் மேற்கும்
டான்ஞ்சாடி
குரும்பை இரண்டை
இழுத்து விழுத்தி
இருந்து புளுதி சக்கப்பணிய
இழுத்து உறிஞ்சி
கடைவாய் துடைத்து
பிளந்து வழுக்கல் தின்று முடித்து
எழுந்து பெரிய ஏவறை விட்டு
செருமிச் சறத்தைக் அள்ளிக் கட்டி
சாக்கு கட்டிலில் போய் சரிஞ்சால்
கொரோனாவிலும் கூடுமின்பம்
குளிர் விறைப்பில்
கோழிக்காலும்
மறந்து துருவிய தேங்காய் பாதி
மலிவில் வாங்கிய
மீன்களில் மிச்சம்
கறுத்துப் போன கத்தரிகாய்கள்
கடித்து வைத்த
சொக்கிலேட் பீஸ்கள்
பச்சை மிளகாய் பத்திருபது
பால் பிளிஞ்சு மிச்ச சொச்சம்
பம்பாய் வெங்காயம்
விழுப்புண்ணடைந்து
குறண்டியபடி பயித்தங்காய்
கொளுத்தரண்டுருழைக் கிழங்கு
முதுகு முறிந்து முருங்கை காய்
முக்கித் தவிக்கும்
பூசணி பாதி
சித்திரவதையில் ஆப்பிள் ஒறேஞ்
சிலையாய்போன கீரைப்பிடி
கல்லாய் சபிஞ்ச
கரட் பீற்றூட்
மேல் பார்க்க முட்டை மூன்று
கீழ்ப்பக்கமும்
கிடக்கும் ஏதோ
இடைக்குள்ளும் இனிப்பாயொன்று
அடைத்து வைக்கும்
அறையை திறந்தால்
அடடா இன்று ஒன்றுமில்லை
குளிர்ப்பதனில்
கொரோனா வருமாம்
கொதிக்க வைக்கத்
தொடங்கி விட்டார்
குசினிக்குள்ளே சுடு தண்ணியை
கூசாவையும் தேடுகின்றார்
மாஸா பீசா மிக்ஸ் புரூட்
கோலா கூலா கொக்கென்று
ஆலாய் பறந்த கூட்டத்தை
அடக்கி வைத்துப் பாடங்கள்
படிப்பித்தது கொரானாவின்று
முடக்கொத்தான் மறந்துவிட்டு
மூடிச் சூப் குடித்தவர்கள்
கொடியினில் தூங்குகின்ற
குருவித்தலை பாவக்காயை
அடிவளவில் பிடுங்கி வந்து
கறிவைக்க கண்டேனின்று
மடிநிறைய முந்தியம்மா
மருத்துவமும் என்றுரைத்து
பிடுங்கி வந்து பிணி தீர்க்க
பேசிபேசி தின்னத்தரும்
வதக்குகின்ற வட்டுக்கத்தரி
வந்ததன்றோ நினைவிலின்று
வாசலிலே பிலாக்காயில்
ஒரு பிரட்டல் கறியின்று
வாழைப்பூ வறையோடு
வல்லாரைச் சம்பலொன்று
ஊறுகாய்த் துண்டுடன்
ஒரு நல்ல அகத்திச் சொதி
இரவுக்கு குறிஞ்சாப்பிட்டு
இடைநேரம் புளுக்கொடியில்
இதுக்கு முதல் சமைக்கும்போது
எங்கயோ ஒருவாறு
உக்குவதாய் கிடந்த பழைய
சத்தகத்தை தேடி எடுத்து
கொக்கையொன்றை கட்டி கிளப்பி
கிழக்கும் மேற்கும்
டான்ஞ்சாடி
குரும்பை இரண்டை
இழுத்து விழுத்தி
இருந்து புளுதி சக்கப்பணிய
இழுத்து உறிஞ்சி
கடைவாய் துடைத்து
பிளந்து வழுக்கல் தின்று முடித்து
எழுந்து பெரிய ஏவறை விட்டு
செருமிச் சறத்தைக் அள்ளிக் கட்டி
சாக்கு கட்டிலில் போய் சரிஞ்சால்
கொரோனாவிலும் கூடுமின்பம்
No comments:
Post a Comment